தயாநிதி மாறனின் முன் ஜாமீன் ரத்து. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தயாநிதி மாறனின் முன் ஜாமீன் ரத்து. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

dayanidhiமுன்னாள் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் தயாநிதி மாறனுக்கு வழங்கியிருந்த முன்ஜாமீனை சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சன் தொலைக்காட்சி குழுவுக்கு பி.எஸ்.என்.எல் இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்திய வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனின் முன்ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என சிபிஐ தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. அதேசமயம் தயாநிதி மாறனுக்கு வழங்கப்பட்ட 6 வார இடைக்கால முன் ஜாமீனை, நிரந்தர ஜாமீனாக வழங்க வேண்டும் என தயாநிதிமாறன் சார்பிலும் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த இரண்டு மனுக்களும் இன்று நீதிபதி வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதி, தயாநிதி மாறனின் முன்ஜாமீன் மனுவை ரத்து செய்ததோடு, 3 நாட்களுக்குள் அவர் சரணடைய வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், முன்ஜாமீன் ரத்தான உத்தரவு நகல் இன்று மாலைக்குள் சிபிஐக்கு வழங்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.

தயாநிதிமாறனின் முன் ஜாமீன் ரத்து செய்யப்பட்டுள்ளதால் திமுக மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply