இந்தியா-பாகிஸ்தானில் திடீர் நிலநடுக்கம். பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்

இந்தியா-பாகிஸ்தானில் திடீர் நிலநடுக்கம். பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்

earthquake in senjiஇந்தியாவின் தலைநகர் டெல்லி உள்பட சண்டிகர், பஞ்சாப், காஷ்மீர், இமாச்சல் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில்  நேற்று நிலநடுக்கம் உணரப்பட்டதால் அப்பகுதி மக்களிடம் பெரும் பீதி ஏற்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

ஆப்கானிஸ்தானை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் டெல்லி, காஷ்மீர் உள்ளிட்ட வடமாநிலங்களில் துல்லியமாக உணரப்பட்டது. அங்குள்ள வீடுகள், கட்டடங்கள் ஒருசில நொடிகள் திடீரென குலுங்கியதால் பொதுமக்கள் பீதியடைந்து வீட்டை விட்டு வெளியே ஓடிவந்தனர்.

6.2 ரிக்டர் அளவுகோலில் பதிவான இந்த நிலநடுக்கம் மிகச்சரியாக ஆப்கன் – இந்துகுஷ் மலைப் பகுதியை மையமாக கொண்டு ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வு வடஇந்தியா மற்றும் பாகிஸ்தானின் ஒருசில நகரங்களிலும் உணரப்பட்டது.

தலைநகர் டெல்லி உள்பட ஒருசில மாநிலங்களில் பூகம்பம் உணரப்பட்டாலும் இந்த பூகம்பத்தால் உயிர்சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் எதுவும் வெளிவரவில்லை. இதே போல் பூகம்பம் உணரப்பட்ட பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், பெஷாவர், முசாப்பராபாத் உள்ளிட்ட நகரங்களிலும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply