சாமை கோழி பிரியாணி

Saamai-Nattu-Kozhi-Biriyani-(Little-Millets)-Pachakam-11184

தேவையான பொருட்கள்

நாட்டு கோழி – 500 கிராம்

மஞ்சள் தூள் – ½ டீஸ்பூன்

இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்

நெய் – 1 டீஸ்பூன்

எண்ணெய் – 2 டீஸ்பூன்

கொத்துமல்லி – ஒரு கைப்பிடி

புதினா – ஒரு கைப்பிடி

காஷ்மீரி மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்

சாமை அரிசி – 500 கிராம்

பிரியாணி இலை – 2

பட்டை – 3

கிராம்பு – 6

ஏலக்காய் – 5

அன்னாசி பூ – 2

வெங்காயம் – 2

இஞ்சி – 50 கிராம்

பூண்டு – 50 கிராம்

தக்காளி – 2

தயிர் – 2 கப்

தேங்காய் பால் – ¼ கப்

செய்முறை

ஒரு பாத்திரத்தில் நறுக்கிய நாட்டு கோழி அத்துடன் சிறிதளவு மஞ்சள் தூள் 1 ½ தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது மற்றும் தேவையான உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து 30 நிமிடம் குளிர் சாதன பெட்டியில் வைக்கவும்.

ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து அதனுடன்பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப் பூ போட்டு வதக்கவும்.

இதனுடன் நீளவாக்கில் வெட்டி வைத்துள்ள வெங்காயம் சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கயி பின்னர், இஞ்சிப் பூண்டு விழுது சேர்த்து, பச்சை வாசனை போன பின் புதினா மற்றும் கொத்துமல்லியைச் சேர்க்கவும்.

பின்னர் நறுக்கிய தக்காளி மற்றும் மஞ்சள் தூள், தயிர் காஷ்மீரி மிளகாய் தூள் ஆகியவற்றுடன்,  தயாரித்து வைத்துள்ள சிக்கன் கலவையைச் சேர்த்து 10 நிமிடங்கள் வேக வைக்கவும்.

கால் கப் தேங்காய் பால் மற்றும் தேவையான தண்ணீர், சாமை அரிசி சிறிதளவு நெய் மற்றும் புதினா, கொத்துமல்லியைச் சேர்த்து 15 நிமிடங்கள் வேக வைத்து இறக்கவும். கமகமக்கு சாமை கோழி பிரியாணி ரெடி!

Leave a Reply