குவோட்ரோச்சியிடம் எவ்வளவு பணம் வாங்கினீர்கள். ராகுலுக்கு சுஷ்மா பதிலடி

குவோட்ரோச்சியிடம் எவ்வளவு பணம் வாங்கினீர்கள் என்று உங்கள் அம்மாவிடம் கேளுங்கள். ராகுலுக்கு சுஷ்மா பதிலடி

sushmaலலித் மோடிக்கு உதவி செய்வதற்காக எவ்வளவு பணம் அவரிடம் வாங்கினீர்கள்’ என்ற கடந்த சில நாட்களுக்கு முன்னர் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி கேட்ட கேள்விக்கு இன்று பாராளுமன்றத்தில் விளக்கமளித்த மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், “லலித்மோடி விவகாரத்தில் தான் எந்த தவறும் செய்யவில்லை. இந்த விவகாரத்தில் எஆன் பணம் வாங்கியதாக குற்றம் சாட்டும் ராகுல் காந்தி, முதலில் உங்கள் அம்மா குவாட்ரோச்சியிடம் எவ்வளவு பணம் வாங்கினார் என்பதை தெரிந்து கொள்ளட்டும்’ என காட்டமாக பதிலளித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் அவர் நாடாளுமன்றத்தில் பேசியதாவது: “லலித் மோடி விவகாரத்தில் நான் எந்த உதவியும் செய்யவில்லை என்ற எனது நிலையில் எந்த மாற்றமும் இல்லை. லலித் மோடியின் 11 வழக்கறிஞர்களில் எனது மகளும் ஒருவர். என் மகள் எந்த பலனும் அடையவில்லை. விசா வழக்கில் எனது கணவர் லலித் மோடிக்கு வழக்கறிஞராக பணியாற்றவில்லை. சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்த போது வருமான வரித்துறை வழக்கறிஞராக அவரது மனைவி நளினி நியமனம் செய்யப்பட்டார். சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்த போது நளினி சாரதா நிதி நிறுவனத்தில் இருந்து ஒரு கோடி ரூபாய் பெற்றார். சிதம்பரம் அமைச்சராக இருந்த போது அவரது மனைவி பணம் பெற்றது விதிமீறலாகும்.

போர்பஸ் ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட குவோட்ரோச்சி, போபால் விஷவாயு கசிவு வழக்கு குற்றவாளி வாரன் ஆண்டர்சன் ஆகியோர் இந்தியாவில் இருந்து தப்பி செல்ல உதவிய கட்சிதான் காங்கிரஸ். தனது குடும்ப வரலாற்றை படித்து தெரிந்துகொண்டு, குவோட்ரோச்சி தப்பிச்செல்ல எவ்வளவு பணம் வாங்கப்பட்டது என தனது தாயார் சோனியா காந்தியிடம் ராகுல் காந்தி கேட்க வேண்டும். ஆன்டர்சன் தப்பி செல்ல நாம் ஏன் உதவினோம் என்றும் அவர் சோனியாவிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்” என காட்டமாக கூறினார்.

சுஷ்மா ஸ்வராஜின் இந்த பதிலால் இந்திய அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply