கூகுள் நிறுவனத்த்தின் தாய் நிறுவன இணையதளத்தை தடை செய்தது சீனா
கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக சென்னையை சேர்ந்த தமிழர் சுந்தர் பிச்சை பதவியேற்று அனைத்து தமிழர்களுக்கு பெருமை சேர்த்துள்ள நிலையில் கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ‘ஆல்ஃபபெட்’ இணையதளத்தை சீன அரசு அதிரடியாக தடை செய்துள்ளது.
தேடுதளமாகவும், சுகாதார, அறிவியல் விவகாரங்களைக் கையாள இருக்கும் இணையதளமாகவும் அமையும் வண்ணம் புதுவிதமாக வடிவமைக்கப்பட்டுள்ள ஆல்ஃபபெட் தளம் ஆரம்பிக்கப்பட்டு வெறும் இருபத்தி நான்கு மணி நேரமே ஆகியுள்ள நிலையில் சீன அரசாங்கம் இதைத் தடை செய்துள்ளது.
கடந்த 2010-ம் ஆண்டு தணிக்கை பிரச்சனைகளால் ஏற்கனவே கூகுளின் ஜிமெயில் முதற்கொண்டு அதன் அனைத்து சேவைகளும் தடை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.. அதேபோன்று ‘மரபுவழியில் இல்லாத வார்த்தைகளின் கலவைகள் இடம்பெற்றிருப்பதால்’ ஆல்ஃபபெட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சீன அரசின் இணையதளம் விளக்கம் அளித்துள்ளது.
சீனா இதுவரை சுமார் இரண்டாயிரத்து எழுநூறு இணையதளங்களை தடை செய்துள்ளது. இதில், யூடியூப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் என அனைத்து முக்கிய இணையதளங்களும் அடக்கம். அந்த வரிசையில் ஆல்ஃபபெட்டும் தடையைச் சந்திக்கலாம் என ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது