கண் பிரச்னையை தீர்க்கும் நெருஞ்சில்

images (2)

கண் பிரச்னையை தீர்க்கும் நெருஞ்சிலை பற்றி நாம் இன்று பார்ப்போம்: நெருஞ்சில் சிறு நெருஞ்சில், பெரு நெருஞ்சில் என இரு  வகைப்படும். பெரு நெருஞ்சிலுக்கு யானை வணங்கி என்ற பெயரும் உண்டு. சிறு நெருஞ்சில் பூக்கள் மஞ்சள் நிறத்தில்  தரையுடன் படரக்கூடியது. யானை நெருஞ்சில் செடியாக வளரக் கூடியது. பூக்கள் சற்று பெரிதாக இருக்கும்.

சிறு நெருஞ்சில் கண் பிரச்னையை தீர்க்க கூடியது. சிறு நெருஞ்சல் செடியுடன் வெள்ளை அல்லது மஞ்சள் கரிசலாங்கண்ணி,  பொன்னாங்கண்ணி சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து குடிக்கலாம். சிறு நெருஞ்சில் உடலுக்கு குளிர்ச்சி தரக்க கூடியது.  வெப்பத்தினால் வரும் நோய்கள் விலகும். பார்வை குறைபாடு நீங்கும். பித்தத்தை சமப்படுத்த கூடியது. ஈரலுக்கு பலத்தை  தரவல்லது. மஞ்சள் காமாலைக்கு நல்ல மருந்து. காமாலையை போக்க கூடியது. ஹெபாடைடிஸ் பி வைரஸ் விலகிப்போகும்.  கண்களை கழுவுவதால் கண் படலத்துக்கு நல்லது.

சிறு நெருஞ்சில் மற்றும் கீழாநெல்லி பசை ஒரு ஸ்பூன் எடுத்து கொள்ளவும். அதனுடன் தயிர் சேர்த்து கலக்க வேண்டும். உப்பு  சேர்க்க கூடாது. இதை வெறும் வயிற்றில் எடுத்துக் கொண்டால் கல்லீரல் பலப்படும். யானை வணங்கி ஈரலை பலப்படுத்தும்  தன்மை கொண்டது. உடலில் ஏற்படும் எரிச்சல், வலியை போக்க கூடியது. ரசாயன மருந்துகளால் ஏற்படும் ஈரல் நோய்  காணாமல் போகும். ஒரு மண்டலம் எடுத்துக் கொண்டால் ஈரல் பலப்படுவதுடன் ரத்தமும் சுத்தமாகும்.

யானை நெருஞ்சில் முட்கள் 10 முதல் 15 வரை எடுத்துக்கொள்ளவும். அவற்றை தட்டி நீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.  அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்துக் கொள்ளலாம். சிறுநெருஞ்சில் முட்களும் சேர்த்து கசாயம் தயாரிக்கலாம். இது கல்லடைப்பு,  சதை அடைப்பை சரிசெய்யும். நெருஞ்சில் முட்கள் நாட்டு மருந்து கடையில் பொடியாகவும் கிடைக்கும்.சிறுநீரக கோளாறுக்கு  யானை நெருஞ்சில் முட்கள் மருந்தாக பயன்பட கூடியது. சிறுநீரக கற்களுக்கு நல்ல தீர்வு தரக்கூடியது.

கல்லை கரைக்க கூடியது. சிறுநீர் தாரையில் எற்படும் தொற்றுக்கு நல்ல மருந்து. எரிச்சலை போக்க கூடியது. பிள்ளை பெற்ற  தாய்மார்களுக்கு நல்லது. சிறுநீர் தாரையில் ஏற்படும் தொற்றை சரிசெய்கிறது. சிறுநீரில் ரத்தம் கலந்து போவதை தடுக்கிறது.
யானை நெருஞ்சிலை பயன்படுத்தி வெள்ளைப்படுதலுக்கான மருந்து தயாரிக்கலாம். யானை நெருஞ்சில் இலைகளை ஒரு பவுல்  தண்ணீரில் 10 நிமிடம் அமுக்கி வைக்க வேண்டும். யானை நெருஞ்சிலை நீரில் துலவி வந்தபோது நீர் கெட்டியான தன்மையை  பெறுகிறது. நீர் கொலகொலப்பான தன்மை பெறுகிறது.

அந்த தண்ணீருடன் பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைத்து குடிக்க வேண்டும். 2 மணி நேரத்துக்கு ஒருமுறை குடித்தால்  வயிற்றுப்போக்கு சரியாகும். இரண்டு வாரத்தில் வெள்ளைப்படுதல் சரியாகும். இது சீதபேதி, வயிற்றுப்போக்கு  வெள்ளைப்படுதலுக்கு நல்லது. வெறும் வயிற்றில் குடிப்பதால் நுண் கிருமிகள் அழியும். நோய் தீர்க்கும். வலி நிவாரணியாக  அமைகிறது. இதய நோய், நுரை ஈரல் நோய், சிறுநீரக கோளாறை சரி செய்ய கூடியது.

 

Leave a Reply