பிரம்மபுத்திரா நதியில் சீனா அணை. மத்திய அரசு கண்டு கொள்ளாதது ஏன்? அசாம் முதல்வர்

பிரம்மபுத்திரா நதியில் சீனா அணை. மத்திய அரசு கண்டு கொள்ளாதது ஏன்? அசாம் முதல்வர்

tarun-gogoiஇந்தியாவின் அண்டை நாடான சீனா, பிரம்மப்புத்திரா நதியில் அணை கட்ட எடுக்கும் முயற்சியை தடுக்க மத்திய அரசு எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என்று அசாம் முதல்வர் தருண் கோகாய் குற்றஞ்சாட்டி உள்ளார்.

பிரம்மப்புத்திரா நதியில் பிரம்மாண்ட அணை கட்ட சீனா அனைத்து நடவடிக்கைகளையும் மும்முரமாக எடுத்து வருகிறது. இந்தியாவுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய சீனாவின் இந்த நடவடிக்கைக்கு அசாம் மாநில முதல்வர் தருண் கோகாய் கவலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”பிரதமர் மோடி சமீபத்தில் சீனாவுக்கு சுற்றுப்பயணம் சென்றபோது, இந்த விவகாரத்தை அந்த நாட்டிடம் எழுப்ப வேண்டும் என்று நான் பிரதமர் மோடியிடம் ஏற்கனவே வலியுறுத்தி இருந்தேன்.

இந்த அணைகள் கட்டப்பட்டால், அசாம், மற்றும் வடகிழக்கு பிராந்தியங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்று தெரிந்தும் இந்த விவகாரத்தை மத்திய அரசு தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை” என்று கூறி உள்ளார்.

Leave a Reply