மாணவர்களுடன் இணைந்து போராட்டம் நடத்திய ராகுல்காந்தி

மாணவர்களுடன் இணைந்து போராட்டம் நடத்திய ராகுல்காந்தி

rahul gandhiபாராளுமன்றத்தின் இரு அவைகளும் ஒருநாள் கூட உருப்படியாக இயங்கவிடாமல் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் லலித் மோடி விவகாரங்களுக்காக பாரளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைத்த காங்கிரஸ் அரசு, தற்போது நாடாளுமன்ற கூட்டம் முடிந்த நிலையில் அடுத்தகட்ட குற்றச்சாட்டை கூறியுள்ளது. இம்முறை காங்கிரஸின் குற்றச்சாட்டுக்கு ஆளானது ஆர்.எஸ்.எஸ். இயக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

மஹாராஷ்டிர மாநிலம் புனே நகரில் உள்ள இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி மையத்தின் தலைவராக, கஜேந்திர சௌவுகான் அவர்களை மத்திய அரசு நியமனம் செய்தது. பாஜகவை சேர்ந்த இவரை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் இந்த மையத்தின் தலைவராக நியமனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கஜேந்திர செளகான், ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர் என்பதால் இவரை ஆர்.எஸ்.எஸ். தான் தேர்வு செய்தது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. எனவே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களின் பிரதிநிதிகளை அழைத்துக்கொண்டு குடியரசுத் தலைவரைச் சந்தித்து, இந்தப்  பிரச்னை பற்றி முறையிட்டுள்ளார் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி.

குடியரசுத் தலைவரைச் சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி “பிரதமருக்கும், பாஜகவிற்கும் ஜால்ரா அடிப்பவர்கள் மட்டும் உயர் கல்வி நிறுவனங்களின் தலைமை பொறுப்புகளில் நியமிக்கப்படுகிறார்கள். இதன் மூலம் மாணவர்களுக்கு தவறான செய்தி அளிக்கப்படுகிறது. முக்கிய பொறுப்புகளில் அமர்த்தப்படுபவர்கள் அதற்கான தகுதியுடன் இருப்பது இல்லை. கல்வி நிறுவனங்களை ஆர்.எஸ்.எஸ். கைப்பற்றி வருகிறது. கல்வி நிறுவனங்கள் அரசியல் மயமாக்கப்படுகிறது. இது மாணவர்கள் நலனுக்கு எதிரானது” என்றார்.

Leave a Reply