இந்தியா-பாகிஸ்தான் வரலாற்றில் முதல்முறையாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மத்தியிலான பேச்சுவார்த்தை

இந்தியா-பாகிஸ்தான் வரலாற்றில் முதல்முறையாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மத்தியிலான பேச்சுவார்த்தை

india and pakistanகடந்த மாதம் ரஷ்யாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின்போது சந்தித்த பேசிய இந்திய பிரதமர் மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஆகியோர் இருநாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நிலையிலான சந்திப்பை நடத்த முடிவு செய்தனர். இந்த முடிவின்படி ஆகஸ்ட் 23ஆம் தேதி  இந்தியா-பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் சந்தித்து பேச்சு நடத்த உள்ளனர். இந்தியா பாகிஸ்தான் வரலாற்றில் முதல்முறையாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மத்தியிலான பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் நகரில் பாகிஸ்தான்  பிரதமரின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளி விவகாரத்துறை ஆலோசகருமான சர்தாஜ் அஜீஸ் நேற்று பத்திரிகையாளர்களிடம் பேசியபோது, “இந்தியா-பாகிஸ்தான் பிரச்சனைகள் குறித்து பேச்சு நடத்துவதற்காக நான் வரும் 23-ம் தேதி இந்தியாவுக்கு செல்ல இருக்கிறேன். இந்த பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமானதாகவும், இருதரப்புக்கும் பயனளிக்கும் வகையிலும் இருக்க வேண்டும். இருநாடுகளுக்கு இடையே நிலவி வரும் முக்கிய பிரச்சினையான காஷ்மீர் விவகாரம் உள்பட அனைத்து பிரச்சினைகள் குறித்தும் பேசப்படும்” என்று கூறினார்

ஆனால் பாகிஸ்தான் உயரதிகாரிகள் கூறும்போது, இப்போது பேச்சு நடத்துவதற்காக இந்தியா பரிந்துரைத்த தேதிகள் ஒப்புக் கொள்ளப்பட்டாலும், தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் இந்திய பயணம் குறித்த இறுதி முடிவை பிரதமர் நவாஸ் ஷெரீப் எடுப்பார்” என்று தெரிவித்தனர்.

Leave a Reply