பெரிய காஞ்சிபுரம், ரேணுகாம்பாள் கோவில் ஆடி திருவிழாவை முன்னிட்டு, அம்மன் ஒவ்வொரு நாளும், ஒரு அலங்காரத்துடன் அருள்பாலிக்கிறார்.ஆடி மாதம், அனைத்து அம்மன் கோவில்களிலும் திருவிழாக்கள் நடந்து வருகின்றன. காஞ்சிபுரம், ரேணுகாம்பாள் கோவில் திருவிழா கடந்த, 8ம் தேதி துவங்கியது. முப்பெரும் சக்தி, விஸ்வரூபம், பெரியநாயகி என்ற பெரியாயி, தாய் மூகாம்பிகை என, அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.நேற்று முன்தினம் இரவு, பெரியாயி அம்மன் சயன கோலத்தில் வேப்பம் தழையில்படுத்து இருப்பது போல் அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். நேற்று இரவு, தாய் மூகாம்பிகை அலங்காரத்தில் ரேணுகாம்பாள் அருள் பாலித்தார். வரும், 21ம் தேதி, பேரரசி அலங்காரத்துடன் நிறைவு பெறுகிறது.