இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி. 2வது இன்னிங்ஸில் இலங்கை அபாரம்
இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்று கொண்டிருக்கும் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்சில் இலங்கை அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 367 ரன்கள் குவித்துள்ளதால் இந்திய அணி வெற்றி பெற 178 ரன்கள் இலக்கு என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முதல் இன்னிங்ஸில் 183 ரன்களுக்கு ஆட்டமிழந்த இலங்கை அணி, இரண்டாவது இன்னிங்ஸில் சுதாரித்து, 367 ரன்கள் குவித்துள்ளது. சண்டிமால் 162 ரன்களும், திரமன்னே 49 ரன்களும், முபாரக் 49 ரன்களும், சங்கரகரா 40 ரன்களும் எடுத்து இலங்கை அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்றனர்.
இந்தியா முதல் இன்னிங்சில் 375 ரன்கள் எடுத்திருந்ததால், 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கியது. ஆனால் தொடக்கத்திலேயே ராகுல் விக்கெட்டை இழந்து 23/1 என்ற நிலையில் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று முடிவுக்கு வந்தது. இந்தியா வெற்றி பெற இன்னும் 153 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை உள்ளது. இன்னும் இரண்டு நாள் மீதமிருக்கும் நிலையில் இந்திய அணி வெற்றி பெறுமா? என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்
ஸ்கோர் விபரம்
இலங்கை முதல் இன்னிங்ஸ் 183/10
இந்தியா முதல் இன்னிங்ஸ் 367/10
இலங்கை இரண்டாவது இன்னிங்ஸ் 375/10
இந்தியா இரண்டாவது இன்னிங்ஸ் 23/1