பிளாஸ்டி பைகளை பயன்படுத்த சென்னை மாநகராட்சி தடை.

பிளாஸ்டி பைகளை பயன்படுத்த சென்னை மாநகராட்சி தடை.

plasticஇந்தியாவின் 69வது சுதந்திர தினத்தை ஆக்கபூர்வமாக கொண்டாடும் விதத்தில் சுற்றுப்புற சூழலை மாசு படுத்தும் பிளாஸ்டி பைகளுக்கு சென்னை மாநகராட்சி நேற்று முதல் தடை விதித்துள்ளது.

சென்னையில் பெரும்பாபாலும் உணவகங்கள், திருமண விழாக்களில் தான் அதிகளவில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுவதாகவும், ஒவ்வொரு நாளும் சென்னையில் சேரும் சுமார் 5,000 டன் கழிவுகளில் 429 டன் பிளாஸ்டிக் குப்பைகள் சேர்வதாகவும் ஒரு புள்ளிவிபரம் கூறுகின்றது. சென்னை தற்போது உலக அளவில் மாசு நிறைந்த நகரங்களில் 61வது இடத்தில் உள்ளது. மேலும், டெல்லிக்கு அடுத்தபடியாக பிளாஸ்டிக் கழிவுகள் அதிகம் உள்ள இந்திய நகரமாக சென்னை உள்ளது. எனவே இந்த நிலையை கண்டிப்பாக தடுக்க வேண்டும் என்ற முனைப்புடன் சென்னை மாநகராட்சி சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது.  

அதன்படி, 40 மைக்ரான்களுக்கும் குறைவான பாலித்தீன் பைகள் மற்றும் பிளாஸ்டிக் பைகளை சென்னையில் பயன்படுத்த ஆகஸ்ட் 15 முதல் தடை விதிக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. அதையும் மீறி பயன்படுத்துவோர்களுக்கு அபராதம் உள்ளிட்ட பல தண்டனைகள் வழங்கப்படும் எனவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்கள் சுற்று சூழல் கருதி துணிப்பைகள் அல்லது காகித பைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் மாநகராட்சி சார்பில் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது. சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் 40 மைக்ரான்களுக்கு குறைவாக அளவுள்ள பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிளாஸ்டிக் தொடர்பான பொருட்களுக்கு எதிரான இந்தத் தடை அமல்படுத்தப்பட உள்ளது.

Leave a Reply