மதுவிலக்கு போராட்டத்தில் இறந்தவர் போல நடித்தவர் திடீர் மரணம்.

மதுவிலக்கு போராட்டத்தில் இறந்தவர் போல நடித்தவர் திடீர் மரணம்.

deadதமிழகமெங்கும் பூரண மதுவிலக்கு கோரி ஆர்ப்பாட்டங்கள் நடந்து வரும் நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த போராட்டத்தில் ஈடுபட்ட காந்தியவாதி சசிபெருமாள் மரணம் அடைந்த அதிர்ச்சியே இன்னும் நீங்காத நிலையில் தற்போது மதுவிலக்கு போராட்டத்தில் இறந்தவர் போல நடித்த திமுக பிரமுகர் ஒருவர் மறுநாளே உண்மையிலேயே மரணம் அடைந்த செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் ராணிப்பேட்டையில் கடந்த 10 ஆம் தேதி தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஆத்தூர் முல்லைவாடி பகுதியைச் சேர்ந்த முன்னாள் வார்டு செயலாளர் சேட்டு என்கிற செல்வராஜ் என்பவர் மது குடித்ததால், இறந்து போனவர் போல நடித்தார். அவரது நெற்றியில் ஒரு ரூபாய் காசு  ஒட்டப்பட்டு மாலைகள் போடப்பட்டு அவரை சுற்றி பெண்கள் அமர்ந்து ஒப்பாரி வைத்து அழுவது போன்ற போராட்டம் ஒன்று நடைபெற்றது.

ஆனால் இந்த போராட்டம் முடிந்த மறுநாளே அவர் திடீரென அவரது வீட்டில் மரணம் அடைந்தார். அவரது மரணம் இயற்கையானது என்று கூறப்பட்டாலும், அவர் பிணமாக நடித்ததால்தான் இறந்துவிட்டதாக அந்த பகுதியில் பெரும் பரபரப்புடன் பேசி வருகின்றனர்.இந்த சம்பவம் சேலம் மாவட்ட திமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply