விளையாட்டு வீரர்கள் போல் அரசியல்வாதிகளுக்கும் போதை மருந்து சோதனை. பஞ்சாப் அமைச்சர்

விளையாட்டு வீரர்கள் போல் அரசியல்வாதிகளுக்கும் போதை மருந்து சோதனை. பஞ்சாப் அமைச்சர்

punjabதேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் ஏற்படுத்தி வரும் நிலையில் பஞ்சாப் மாநில அமைச்சர் ஒருவர்  தேர்தலில் போட்டியிடும் அரசியல்வாதிகளுக்கு போதை மருந்து பரிசோதனையை கட்டாயமாக்க வேண்டும் என்று சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை தெரிவித்திருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பஞ்சாப் மாநில விவசாயத்துறை அமைச்சர் டோடா சிங். இவர் அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளிப்படுத்துவம் வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று லூதியானாவில் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ”தேர்தலில் போட்டியிடும் அரசியல்வாதிகள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதற்கு முன்பு, அவர்களை போதை மருந்து பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். இந்தப் பரிசோதனையை தேர்தல் ஆணையம் கட்டாயமாக்க வேண்டும்.

விளையாட்டு வீரர்கள் அனைவரும் போட்டிக்கு முன்னதாக ஊக்க மருந்து சோதனைக்கு உள்ளாக்கப்படும்போது, அரசியல்வாதிகளுக்கும் ஏன் இதை கட்டாயமாக்கக் கூடாது? போதை மருந்து அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்துவதற்கு இந்த நடவடிக்கை மிகவும் அவசியமாகும். ஆனாலும், இது எனது தனிப்பட்ட கருத்து தான்” என்று கூறியுள்ளார்.

இவரது கருத்துக்கு பஞ்சாப் அரசு தரப்பில் இருந்து இன்னும் எவ்வித விளக்ககும் கொடுக்கவில்லை. அரசியல்வாதிகள் மத்தியில் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி வந்தபோதிலும், பொதுமக்கள் டுவிட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் இவரது கருத்து பெரும் ஆதரவு கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply