முதுநிலை யோகா படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

download

சென்னை அரசு யோகா, இயற்கை மருத்துவக் கல்லூரியில் முதுநிலை யோகா படிப்பில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு யோகா, இயற்கை மருத்துவக் கல்லூரியில் 2015-16-ஆம் கல்வியாண்டில் மூன்றாண்டு முதுநிலை (எம்.டி) யோகா, இயற்கை மருத்துவப் படிப்புக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான விண்ணப்பங்களை தமிழக சுகாதாரத் துறை இணையதளத்தில் இருந்து பதவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்தப் படிப்புக்கு நேரடி விண்ணப்ப விநியோகம் கிடையாது.

விண்ணப்பங்களை ஆகஸ்ட் 17-ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் செப்டம்பர் 11-ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் “செயலாளர், தேர்வுக்குழு, இந்திய மருத்துவம், ஹோமியோபதித் துறை, அரும்பாக்கம், சென்னை- 106′ என்ற முகவரிக்கு சென்று சேர வேண்டும். இந்தப் படிப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு செப்டம்பர் 26-ஆம் தேதி நடைபெறும்.

மேலும் விவரங்களுக்கு: www.tnhealth.org

Leave a Reply