குப்பை தொட்டியில் குப்பை போட்டால் இலவச வைஃபை. மும்பை இளைஞர்களின் புதுமையான கண்டுபிடிப்பு

குப்பை தொட்டியில் குப்பை போட்டால் இலவச வைஃபை. மும்பை இளைஞர்களின் புதுமையான கண்டுபிடிப்பு

wifiபாரத பிரதமர் நரேந்திர மோடியின் ‘தூய்மை இந்தியா’ திட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில் மும்பை இளைஞர்கள் நகரத்தை தூய்மைப்படுத்த ஒரு புதுமையான ஐடியா ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பிற்கு பல்வேறு இடங்களில் இருந்து அவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

மும்பையை சேர்ந்த ப்ரதீக் அகர்வால் மற்றும் அவரது நண்பர் ராஜ் தேசாய் ஆகிய இரு நண்பர்களும் இணைந்து கண்டுபிடித்த புதுமையான ஐடியா இதுதான். அதாவது  குப்பைகளை அதற்குரிய குப்பைத் தொட்டிகளில் போட்டவுடன் அந்த குப்பை தொட்டியில் ‘கோட் நம்பர்’ ஒன்று தெரியும். அந்த நம்பரின் மூலம் இலவச ‘வை-ஃபை’ இணைப்பு பெறலாம். இது முற்றிலும் இலவசம் என்பதால் பலர் தங்களது குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவார்கள் என்றும் இதனால் மும்பை நகரமே தூய்மையாக மாற வாய்ப்பு உள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து இந்த நண்பர்கள் செய்தியாளர்களிடம் கூறியபோது, ” நாங்கள் ஒரு முறை இசை விழா ஒன்றுக்குச் சென்றிருந்தோம். அந்த இசை விழாவில், இசையுடன், உணவும் கிடைத்தது. அதேநேரம் அந்த இடம் முழுக்க குப்பைகளாலும் நிரம்பியிருந்தது. அப்போதுதான் எங்களுக்கு ஓர் எண்ணம் தோன்றியது. இந்தக் குப்பைகளை அதற் குரிய குப்பைத் தொட்டிகளில் போட்டால், உடனே இலவசமாக வை-ஃபை வசதி கிடைக்கும்படி, ஒரு கண்டுபிடிப்பைச் செய்தால் நன்றாக இருக்குமே, என்ற யோசனையின் விளைவுதான் இந்த கண்டுபிடிப்பு. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Leave a Reply