கூகுள், யாஹூ இணையதளங்களை தடை செய்ய சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

கூகுள், யாஹூ இணையதளங்களை தடை செய்ய சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

googleகருவில் இருக்கும் குழந்தை ஆணா அல்லது பெண்ணா? என்பது குறித்த சோதனைக்கு இந்தியா முழுவதும் தடை இருக்கும் நிலையில் இதுகுறித்த விளம்பரங்களுக்கும் இந்தியா முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் கூகுள், யாஹூ மற்றும் மைக்ரோசாப்ட்  இந்தியா ஆகிய இணையதளங்கள் இந்த விதிமுறைகளை பின்பற்றாமல் நடந்து வருவதால் மேற்கண்ட இணையதளங்களை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுப்ரீம்கோர்ட்டில் சாபு மாத்யூ ஜார்ஜ் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ” கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை கண்டறியும் சோதனை குறித்த விளம்பரங்கள் மற்றும் தகவல்களை உலகம் முழுவதும் முடக்குமாறு மேற்கண்ட இணையதளங்களுக்கு ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தும், அதை அவை கடைபிடிக்காமல் இந்திய சட்டங்களை மீறி வருகின்றன’ என்று கூறியிருந்தார்.

இந்த மனு மீது இன்று விசாரணை நடத்தி நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இந்த குற்றச்சாட்டுக்கு இரண்டு வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு கூகுள் உள்ளிட்ட மூன்று இணையதளங்களுக்கும் நோட்டீஸ் அனுப்புமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Leave a Reply