இந்திய அணியில் இருந்து திடீரென தவான் வெளியேறியது ஏன்?
இந்திய அணியில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் நல்ல நிலையில் விளையாடி வரும் தவானுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் இலங்கையில் இருந்து நாடு திரும்புகிறார். அடுத்து நடைபெறவுள்ள இரண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலும் தவான் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் காலே நகரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்திருந்தபோதிலும் தவான் அந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் 134 ரன்னும், இரண்டாவது இன்னிங்சில் 28 ரன்னும் எடுத்தார். இந்நிலையில் நேற்றைய பயிற்சியின்போது அவருக்கு எதிர்பாராதவிதமாக காயம் ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக இந்திய டெஸ்ட் அணியில் இருந்து விலகுவதாக ஷிகர் தவான் திடீரென இன்று அறிவித்துள்ளார்.
காயம் காரணமாக மற்ற இரண்டு போட்டிகளில் விளையாட போவதில்லை என்றும் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. தவானின் இந்த திடீர் முடிவு இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.