இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் புதிய சாதனை

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் புதிய சாதனை

 Royal visit to Hertfordshireஇங்கிலாந்து நாட்டின் ராணியாக பதவியில் இருந்து வரும் இரண்டாம் எலிசபெத் தொடர்ந்து 63 ஆண்டுகள் ராணி பதவியில் இருந்து சாதனை செய்துள்ளார்.

இவருக்கு முன் இவரது முப்பாட்டி விக்டோரியா மகாராணி தொடர்ந்து 63 ஆண்டுகள் ராணியாக பதவி வகித்து செய்த சாதனையை தற்போது இரண்டாம் எலிசபெத் சமன்செய்துள்ளார்.

இரண்டாம் எலிசபெத் அவர்களின் தந்தை மரணம் அடைந்த பிறகு கடந்த 1952ஆம் ஆண்டு பிப்ரவரி 6ஆம்தேதி ராணியாக தனது 25வது வயதில் பதவியேற்றார். தற்போது அவருக்கு 89 வயது ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வரும் செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி வந்தால் இவர் ராணியாக பதவியேற்று 64வது வருடம் தொடங்குவதால் அன்றைய தினம் மிக நீண்டநாள் ராணியாக இருந்தவர் என்ற பெருமையை அவர் பெறவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் ராணி எலிசபெத்துக்கு இப்போதே பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் குவிய ஆரம்பித்துவிட்டது.

Leave a Reply