இன்றைய ராசிபலன் 20/08/2015
மேஷம்
மறைந்துக் கிடந்த திறமைகள் வெளிப்படும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள்-. தாய்வழியில் மதிப்புக் கூடும். புது வேலை அமையும். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை
ராசி குணங்கள்
ரிஷபம்
குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வீட்டை விரிவுப்படுத்துவது குறித்து யோசிப்பீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை
ராசி குணங்கள்
மிதுனம்
புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள்
ராசி குணங்கள்
கடகம்
பழைய பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவுக் கிடைக்கும். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை
ராசி குணங்கள்
சிம்மம்
குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. சொத்துப் பிரச்சனையில் நல்ல தீர்வு கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி உங்கள் ஆலோசனையை ஏற்பார். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், பிங்க்
ராசி குணங்கள்
கன்னி
கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். வர வேண்டி பணம் கைக்கு வரும். சோர்வு நீங்கி சுறுசுறுப்பாவீர்கள். தாழ்வுமனப்பான்மை நீங்கும். உடல் நலம் சீராகும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, ரோஸ்
ராசி குணங்கள்
துலாம்
ராசிக்குள் சந்திரன் செல்வதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். குடும்பத்தில் சலசலப்புகள் வந்து நீங்கும். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். சிலர் உதவுவதை போல் உபத்திரவம் தருவார்கள். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, க்ரீம் வெள்ளை
ராசி குணங்கள்
விருச்சிகம்
சில வேலைகளை நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது. உறவினர்கள், நண்பர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். வாகனத்தை எடுக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா என பார்த்துக் கொள்ளுங்கள். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரக்கூடும். உத்யோகத்தில் மறைமுகப் பிரச்னைகள் வந்து நீங்கும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, கிரே
ராசி குணங்கள்
தனுசு
எதையும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். பிரபலங்களின் நட்பு கிட்டும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், வைலெட்
ராசி குணங்கள்
மகரம்
உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். உறவினர், நண்பர்களால் அனுகூலம் உண்டு. பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். வியாபாரம் செழிக்கும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
ராசி குணங்கள்
கும்பம்
கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, பிங்க்
ராசி குணங்கள்
மீனம்
சந்திராஷ்டமம் தொடங்குவதால் தேவையற்ற விஷயங்களை மனதில் நினைத்து குழம்பிக் கொண்டிருக்காதீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. யதார்த்தமாக நீங்கள் பேசுவதைக் கூட சிலர் தவறாகப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்யோகத்தில் மறைமுக அவமானம் வந்து நீங்கும். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம்