பிரிவினை அரசியல் கூடாது. மீண்டும் பிரதமராகும் ரணில் விக்ரமசிங்கே எச்சரிக்கை

பிரிவினை அரசியல் கூடாது. மீண்டும் பிரதமராகும் ரணில் விக்ரமசிங்கே எச்சரிக்கை

ranilசமீபத்தில் நடைபெற்ற இலங்கை நாடாளுமன்றத்தேர்தலில் ராஜபக்சேவை தோற்கடித்து மீண்டும் இலங்கை பிரதமராக இன்று பதவியேற்கும் ரணில் விக்ரமசிங்கே, ‘நாட்டில் பிரிவினை அரசியல் நடத்தக் கூடாது என்று அரசியல் கட்சிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.  

இலங்கையில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் பதவிக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே மற்றும் ராஜபக்சே ஆகியோர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் ரணில் விக்ரமசிங்கே அவர்கள் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி 106 இடங்களில் வெற்றி பெற்றது. இருப்பினும் இந்த கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனவே ம், பிற கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் ரணில் இன்று 4-வது முறையாக பிரதமர் பதவியேற்க இருக்கிறார். இலங்கை தலைநகர் கொழும்பில் இன்று எளிமையான முறையில் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் அதிபர் சிறிசேனா, ரணிலுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். அவருடன் அமைச்சர்களும் பதவியேற்பார்கள் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் தேர்தல் முடிவு குறித்து கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ரணில் “கடந்த ஜனவரி 8-ம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில் புதிய புரட்சி ஏற்பட்டது. அந்த புரட்சிக்கு ஆதரவாகவே மக்கள் இப்போதும் வாக்களித்துள்ளனர். அவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப நல்லாட்சி அமைப்போம். நல்லொழுக்கம் மிக்க நாட்டை கட்டி எழுப்புவோம். அனைத்து தரப்பு மக்களும் சம அந்தஸ்துடன் வாழ நடவடிக்கை எடுப்போம். புதிய யுகத்தில் சவால்களை எதிர்கொண்டு புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்குவோம். வெற்றியாளர்கள், தோற்றவர்கள் என்று பிரிந்து செயல்படாமல் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். நாட்டில் யாரும் பிரிவினை அரசியல் நடத்தக் கூடாது என்று கூறினார்.

Leave a Reply