திருமலையில், அதிக மழை பெய்ய வேண்டி, சிறப்பு யாகம் நடத்தும்படி, திருப்பதி தேவஸ்தானத்துக்கு, ஆந்திர மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் ஆட்சி நடக்கிறது. இங்கு, சமீபகாலமாக பருவமழை பொய்த்து வருகிறது. நெல்லுார், கடப்பா, ராயலசீமா, கர்னுால் ஆகிய மாவட்டங்கள், போதிய மழை இல்லாததால் வறண்டு போயுள்ளன. இந்நிலையில், அதிக மழை பெய்ய வேண்டி, சிறப்பு யாகம் நடத்தும்படி, திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஆந்திர மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, இதற்கான ஏற்பாடுகளை தேவஸ்தானம் துவங்கியுள்ளது. மாநில அரசின் இந்த நடவடிக்கையை சமூக ஆர்வலர்களும், விஞ்ஞானிகளும் கடுமையாக விமர்சித்து உள்ளனர். புவி வெப்ப மயமாதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், மழையின் அளவு குறைந்து விட்டது. இது தெரியாமல், யாகம் நடத்துவதற்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது, கேலிக் கூத்தாக உள்ளது என, அவர்கள் விமர்சித்துள்ளனர்.