115 அடி உயரத்தில் அந்தரத்தில் ஒரு நீச்சல் குளம்.
[carousel ids=”70343,70342,70341,70340,70339″]
பொதுவாக நீச்சல் குளங்கள் தரையில் இருக்கும் அல்லது பெரிய கட்டிடங்களின் மொட்டை மாடியில் இருகும். ஆனால் உலகில் முதல்முறையாக இரு கட்டிடங்களுக்கும் இடையே அந்தரத்தில் ஒரு நீச்சல் குளம் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த நீச்சல் குளங்களில் நீந்துவது த்ரிலிங்கான அனுபவமாக இருப்பதாக நீச்சல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்து நாட்டில் உள்ள பேட்டர்சீ (Battersea) என்ற பகுதியில் இரண்டு பிரமாண்டமான கட்டிடங்களுக்கு இடையில் கடினமான கண்ணாடிகளால் ஆன நீச்சல் குளம் ஒன்று அந்தரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. 115 அடி உயரத்தில் 25 மீட்டர் நீளம் 5 மீட்டர் அகலமுள்ள இந்த நீச்சல்குளம் 3 மீட்டர் ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீச்சல் குளத்திற்கு “ஸ்கை பூல்’ (Sky pool) என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நீச்சல் குளத்தை வேடிக்கை பார்ப்பதற்கும், இதில் நீந்துவதற்கும் தினமும் ஏராளமானோர் வந்து செல்வதாக கூறப்படுகிறது. இந்த நீச்சல் குளத்திற்கு அருகில் ஒரு பார் மற்றும் ரெஸ்டாரெண்ட் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.