இளங்கோவன் எல்லை தாண்டிவிட்டார். பிரபல காங்கிரஸ் தலைவர் கருத்து

இளங்கோவன் எல்லை தாண்டிவிட்டார். பிரபல காங்கிரஸ் தலைவர் கருத்து

ilangoபிரதமர் மோடி மற்றும் முதல்வர் ஜெயலலிதா சந்திப்பை கொச்சைப்படுத்தி விமர்சனம் செய்த தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் அதிமுக மற்றும் பாஜக கட்சியினர் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இளங்கோவனுக்கு தற்போது காங்கிரஸ் கட்சியிலேயே எதிர்ப்பு வலுத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. பிரதமர் மோடி மற்றும் முதல்வர் ஜெயலலிதா சந்திப்பைக் குறித்து விமர்சனம் செய்த காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் எல்லைக் கோட்டைத் தாண்டிவிட்டார் என முன்னாள் மத்திய நிதி அமைச்சரின் மகன் கார்த்தி ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

இதுகுறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த கார்த்தி ப.சிதம்பரம், “அரசியல்வாதிகள் தங்கள் பேச்சில் எதிர்க் கட்சியினரை விமர்சிப்பதும், திசை திருப்பும் வகையில் பேசுவதும் தமிழக அரசியல் வரலாற்றில் வழக்கமானதுதான். ஆனால் எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை உண்டு அதை தாண்டக்கூடாது.

ஆனால் முதல்வர் ஜெயலலிதாவை விமர்சித்த விசயத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் எல்லை தாண்டிவிட்டார். அதே நேரத்தில் அதற்காக நடக்கும் வன்முறை சம்பவங்கள் ஏற்றுக் கொள்ள தக்கதல்ல கண்டனத்துக்குரியது” என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இளங்கோவன் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என இருக்கும் நிலையில் தற்போது அவரது கட்சி தலைவர்களே அவருக்கு கண்டனம் தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply