ஏமாற்றத்துடன் திரையுலகை விட்டு வெளியேறும் அசின்?
கோலிவுட் மற்றும் பாலிவுட்டி முன்னணி நடிகையாக இருந்த அசின், தற்போது மார்க்கெட் இன்றி இருப்பதால், திருமண முடிவை எடுத்ததாகவும், பிரபல தொழிலதிபர் ராகுல் ஷர்மாவை விரைவில் அவர் திருமணம் செய்யவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்த நிலையில், அசின் நடித்த ‘ஆல் இஸ் வெல்’ திரைப்படம் நேற்று வெளியானது.
அபிஷேக்பச்சன், அசின் நடித்த இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் இந்த படத்தின் முதல் நாள் ரிசல்ட் ஏமாற்றும் தரும் வகையில் அமைந்துள்ளது. படத்தை பார்த்த அனைவரும் அதிருப்தி அடைந்துள்ளதாகவும், படம் படுதோல்வி அடைய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆல் இஸ் வெல்’ படத்தின் முன் பாதி முழுக்க தேமே என செல்வதாகவும், முக்கிய காட்சிகள் கூட கோமாளித்தனமாகவும், சுத்தமாக லாஜிக் இல்லாமல் உள்ளதாகவும் முன்னணி பத்திரிகைகள் விமர்சனம் செய்துள்ளது. இந்த படம் அசினுக்கு கடைசி படம் என்பதால் பெரும் வெற்றிப்படமாக அமையவேண்டும் என அவர் விரும்பிய நிலையில் ஏமாற்றத்துடனே அசின் திரையுலகில் இருந்து விலகுவதாக கூறப்படுகிறது. அசினை திரையுலகம் ஏமாற்றினாலும், அவருக்கு வெயிட்டான மாப்பிள்ளை கிடைத்துள்ளதால் அவரது திருமண வாழ்க்கையாவது வெற்றிகரமாக அமையட்டும்.