விஜய்க்கு இருந்த தைரியம் மற்ற பிரபல நடிகர்களுக்கு இல்லாதது ஏன்? திடுக்கிடும் தகவல்
இளையதளபதி விஜய் நடித்த ‘கத்தி’ திரைப்படம் விவசாயிகள் தண்ணீர் பிரச்சனை, எம்.என்.சி நிறுவனங்களின் சுயநலம் மற்றும் அரசியல்வாதிகளின் லஞ்சலாவண்யம் ஆகியவற்றை தோலுரித்து காட்டி பரபரப்பை ஏற்படுத்திய திரைப்படம். ஒரு சமுதாய விழிப்புணர்ச்சியுடன் எடுக்கப்பட்ட இந்த படம் பல சோதனைகளைகளுக்கு பின்னர் தமிழகத்தில் வெளிவந்தது. இந்த படத்தின் புரட்சிகரமான கதையை தெலுங்கில் ரீமேக் செய்ய விரும்பிய தாகூர் மது என்பவர் இந்த படத்தின் தெலுங்கு ரீமே உரிமையை பெற்றார். ஆனால் பிரபல தெலுங்கு நடிகர்கள் யாருமே இந்த படத்தில் நடிக்க மறுத்துவருவதாக கூறப்படுகிறது.
அல்லு அர்ஜூன், பவன்கல்யாண், ராம்சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் இந்த படத்தில் நடிக்க தயங்குவதற்கு இந்த படத்தின் சப்ஜெக்ட்தான் காரணம் என்று கூறப்படுகிறது. பிரபல அரசியல் தலைவர்களையும் பெரிய நிறுவனங்களையும் பகைத்து கொள்ள விரும்பாமல்தான் தெலுங்கு நடிகர்கள் பயப்படுவதாக கூறப்படுகிறது.
விஜய்-முருகதாஸுக்கு இருந்த தைரியம் தெலுங்கு நடிகர்கள் யாரிடமும் இல்லாதது கண்டு தாகூர் மது அதிருப்தி அடைந்திருப்பதாகவும், யாரும் நடிக்காவிட்டால் இந்த படத்தை தெலுங்கில் டப் செய்து வெளியிட உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.