ரத்த பரிசோதனையின் மூலம் தற்கொலை எண்ணத்தை அறியலாம். ஆய்வுக்குழு கண்டுபிடிப்பு

ரத்த பரிசோதனையின் மூலம் தற்கொலை எண்ணத்தை அறியலாம். ஆய்வுக்குழு கண்டுபிடிப்பு

blood testஉலகம் முழுவதும் தற்கொலை செய்து கொள்ளும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த எண்ணிக்கையை தடுக்க பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்து வரும் நிலையில் அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்று, தற்கொலை செய்துகொள்ள நினைக்கும் நபர்களின் எண்ண  ஓட்டத்தை முன்கூட்டியே அறியும் வகையில் ரத்தப் பரிசோதனை செய்வது தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது.

அமெரிக்காவின் இண்டியானா பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து வரும் உளவியல் ஆராய்ச்சி நிலையத்தின் நரம்பியல் துறை தலைவர் நிக்யூலெஸ்க்யூ தலைமையில் ஒரு  குழு கடந்த மூன்று ஆண்டுகளாக ஏராளமான நபர்களிடம் ஆய்வு நடத்தி தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்தில் உள்ளவர்களின் மனநிலையை ரத்தப் பரிசோதனை மூலமாக முன்கூட்டியே அறிந்து கொள்ளலாம் என கண்டறிந்துள்ளனர். இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட நபர்களின் மனநிலை குறித்த கேள்விகள் தொடர்பாக அளிக்கப்பட்ட விடையில் தற்கொலை செய்ய நினைத்தவர்களைப் பற்றி 80 சதவிகிதம் சரியான முடிவுகள் கிடைத்ததாக இந்தக் குழு தெரிவித்துள்ளது.

யாருமே தற்கொலை எண்ணம் இருப்பதைப் பற்றி நேரடியாக பகிர்ந்துகொள்ள விரும்ப மாட்டார்கள் என்பதால் இவர்களிடம் தற்கொலை தொடர்பான நேரடிக் கேள்விகள் எதுவும் கேட்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களது ஸ்மார்ட்போன்களில், இதற்கென உருவாக்கப்பட்ட செயலியின் உதவியாலும் இது ஊர்ஜிதமானது. இந்த மூன்றடுக்கு முறையில் நடந்த பரிசோதனைகளில் 92 சதவிகிதம் துல்லியமாக முடிவு கிடைத்துள்ளது.

இவ்வாறு தற்கொலை எண்ணம் மேலோங்கி இருப்பது முன்னரே கண்டறியப்படும்போது, அவர்களுக்கு முறையான கவுன்சலிங் கொடுத்து அவர்களை தற்கொலை எண்ணத்தில் இருந்து விடுபட வைக்க முடியும் என இந்த குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இந்த ஆய்வு தற்போது ஆண்களிடம் மட்டுமே நடத்தப்பட்டுள்ளதாகவும், வருங்காலத்தில் இதே ஆய்வு, பெண்களிடமும் நடத்தப்பட்டு அதன் முடிவுகள் வெளியிடப்படும் என்றும் இந்த ஆய்வுக்குழு தெரிவித்துள்ளத்.  உலகில் தற்கொலை செய்துகொள்ள எண்ணுவோரின் எண்ணிக்கை வெறும் ரத்தப் பரிசோதனையின் மூலமாகவே பெருமளவு குறையும் வாய்ப்பு உள்ளது என்பதை நம்ப கொஞ்சம் கடினமாகத்தான் உள்ளதாக பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

Leave a Reply