இன்றைய ராசிபலன் 25/08/2015

இன்றைய ராசிபலன் 25/08/2015

astrology
ராசி குணங்கள்
மேஷம்
இரவு 8.00 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கடந்த காலத்தை நினைத்து அவ்வப்போது கொஞ்சம் டென்ஷனாவீர்கள். நல்ல வாய்ப்புகளையெல்லாம் பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்றெல்லாம் வருத்தப்படுவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு சமாராக இருக்கும். உத்யோகத்தில் சவால்களை சந்திக்க வேண்டி வரும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், பிங்க்
 
 
ராசி குணங்கள்
ரிஷபம்
உங்களுக்குள்ளேயே ஒருசில உறுதி மொழிகளை நீங்கள் எடுத்துக் கொள்வீர்கள். தாய்வழி உறவினர்களின் ஆதரவுப் பெருகும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். எதிர்பாராத சந்திப்புகள் நிகழும். வியாபாரத்தில் வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி ஆதரிப்பார். இரவு 8.00 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் கவனமுடன் செயல்பட வேண்டும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, ரோஸ்
 
 
ராசி குணங்கள்
மிதுனம்
உங்கள் செயலில் வேகம் கூடும். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து ஒருபடி உயரும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். பழைய சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, க்ரீம் வெள்ளை
 
 
ராசி குணங்கள்
கடகம்
புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, கிரே
 
 
ராசி குணங்கள்
சிம்மம்
புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் வந்துப் போகும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், வைலெட்
 
 
ராசி குணங்கள்
கன்னி
உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். சொத்துப் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். விவாதங்கள், சவால்களில் வெற்றி பெறுவீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
 
 
ராசி குணங்கள்
துலாம்
இங்கிதமாகப் பேசி எல்லோரையும் கவருவீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, பிங்க்
 
 
ராசி குணங்கள்
விருச்சிகம்
இரவு 8.00 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் உங்களிடம் இருக்கும் சில பலவீனங்களை ஒவ்வொன்றாக சரி செய்துக் கொள்ளப்பாருங்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். உங்களுடைய அணுகுமுறையை மாற்றுங்கள். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம்
 
 
ராசி குணங்கள்
தனுசு
குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். அநாவசியச் செலவுகளை குறைக்கப்பாருங்கள். சகோதர வகையில் அலைச்சல் உண்டு. வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். இரவு 8.00 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் நிதானம் தேவைப்படும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்பு
 
 
ராசி குணங்கள்
மகரம்
சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். காணாமல் போன முக்கிய ஆவணம் ஒன்று கிடைக்கும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிளிப்பச்சை
 
 
ராசி குணங்கள்
கும்பம்
மற்றவர்களால் செய்ய முடியாத செயற்கரிய காரியங்களையெல்லாம் முடித்துக் காட்டுவீர்கள். உடன்பிறந்தவர்களின் பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஊதா
 
 
ராசி குணங்கள்
மீனம்
உங்களுடைய ஆலோசனைகளை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர் நீலம்

Leave a Reply