துணை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வில் திங்கள்கிழமை முடிவில் 3,744 இடங்கள் காலியாக உள்ளன.
பி.எஸ்.சி. செவிலியர், இயன்முறை மருத்துவம் உள்ளிட்ட 9 துணை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் ஆகஸ்ட் 17-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
இதில் அரசுக் கல்லூரிகளில் உள்ள அனைத்து இடங்களும் பூர்த்தியான நிலையில், தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. திங்கள்கிழமை நடைபெற்ற கலந்தாய்வில் 555 இடங்கள் நிரம்பின. பி.எஸ்.சி. செவிலியர் 3008, பி.பார்ம் 384, இயன்முறை மருத்துவம் 324, ஆக்குபேஷனல் தெரப்பி 28 இடங்கள் என மொத்தம் 3744 இடங்கள் காலியாக உள்ளன. ஆகஸ்ட் 27-ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும்.