சிரியாவில் 2000 ஆண்டுகள் பழமையான கோவிலை தகர்த்த ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள்

சிரியாவில் 2000 ஆண்டுகள் பழமையான கோவிலை தகர்த்த ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள்

[carousel ids=”70496,70495,70494,70493,70492,70491,70490,70489,70488,70487″]

syriya 3சிரியா மற்றும் ஈராக் நாடுகளின் பல பகுதிகளை ஆக்கிரமித்து அங்கு தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வரும் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தினர் சிரியாவில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில் ஒன்றை நேற்று தகர்த்து தரைமட்டமாக்கியுள்ளனர். இதனால் அந்த பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கி.மு.17ஆம் நூற்றாண்டில் ரோம் நாட்டை ஆண்ட ஹட்டியன் என்ற மன்னனால் சிரியாவில் கட்டப்பட்ட கோவில் ஒன்றை ஐ.எஸ். தீவிரவாதிகள் தகர்த்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஏற்கெனவே சிரியாவில் உள்ள மொசூல் நகரை தங்களது வசத்தில் வைத்துக் கொண்டு அங்கிருந்த 7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மெசபடோமிய கால பாரம்பரியச் சின்னங்களை அழித்து அதன் வீடியோ காட்சிகளை வெளியிட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தினர் தற்போது மற்றுமொரு புராதன சின்னத்தை அடியோடு அழித்துள்ளதாக வந்துள்ள செய்தி சிரியாவின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

பழங்காலத்து கற்களால் பிரம்மாண்டமாக கட்டப்பட்ட கோயிலை தகர்ப்பதும் மிகவும் கடினம் என்பதால் பெருமளவில் வெடிப்பொருட்களின் உதவியினால் இந்த பழமையான கோவில்களின் மையப்பகுதியில் நிரப்பி, அதனை ஐ.எஸ். இயக்கத்தினர் வெடிக்கச் செய்ததாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

Leave a Reply