ஒரே நாளில் ரூ.24 ஆயிரம் கோடி சொத்து மதிப்பை இழந்த சீன தொழிலதிபர்
சீனாவில் கடந்த வாரம் பொருளாதாரம் பெரும் சரிவை கண்டது. இதனால் சீன பங்குச்சந்தைகள் மட்டுமின்றி அதன் பாதிப்பு உலகம் முழுவதும் தெரிந்தது. இந்திய பங்குச்சந்தையும் நேற்று முன் தினம் பெரும் சரிவை சந்தித்து ஒரே நாளில் சுமார் 7 லட்சம் கோடி ரூபாயை முதலீட்டாளர்கள் இழந்தனர். இந்நிலையில் சீனாவை சேர்ந்த மிகப்பெரிய கோடீஸ்வரர் ஒருவர் இந்த பங்குச்சந்தை சரிவில் தனது சொத்து மதிப்பில் ஒரே நாளில் 3.6 பில்லியன் டாலரை இழந்தார். இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.24 ஆயிரம் கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
வாங் ஜியான்லின் என்ற இந்த கோடீஸ்வரர் சீனாவின் மிகப்பெரிய பணக்காரர் மட்டுமின்றி சீனாவின் பொழுதுபோக்கு நிறுவனமான டாலியன் வாண்டா நிறுவனத்தின் உரிமையாளரும் ஆவார். நேற்று ஒரே நாளில் இவர் தனது சொத்து மதிப்பில் 10 சதவீதத்திற்கும் அதிகமாக இழந்தார் என்று கூறப்படுகிறது. நேற்றைய வர்த்தகத்தில் அவரது நிறுவனம் மிகப்பெரிய சரிவை சந்தித்தது. அதேசமயம், அவரது சொத்து மதிப்பு இந்த ஆண்டு மட்டும் 6 பில்லியன் டாலர் அளவுக்கு அதிகரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சீனாவின் இரண்டாவது பெரிய பணக்காரரும், இ-காமர்ஸ் நிறுவனமான அலிபாபாவின் நிறுவனருமான ஜேக் மா என்பவருக்கு நேற்று 545 மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டது