திருவோண பூஜைகளுக்காக.. சபரிமலை நடை திறப்பு!

12tvpt-sabarimala_1266089f

திருவோண பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. 30-ம் தேதி வரை நடை திறந்திருக்கும்.இன்று மாலை 5.30 மணிக்கு மேல்சாந்தி கிருஷ்ணதாஸ் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றுவார். வேறு எந்த விசேஷ பூஜைகளும் நடைபெறாது. இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும். நாளை அதிகாலை ஐந்து மணிக்கு நடை திறந்த பின்னர், வழக்கமான நெய்யபிஷேகம் மற்றும் இதர பூஜைகள் நடைபெறும். நாளை உத்திராடம் நட்சத்திர சிறப்பு பூஜைகளும், விருந்தும் நடைபெறும்.28-ம் தேதி ஐயப்பனுக்கு திருவோண பட்டு அணிவித்து பூஜைகள் நடைபெறும். அன்று மதியம் பக்தர்களுக்கு தேவசம்போர்டு சார்பில் திருவோண விருந்து வழங்கப்படும். 30-ம் தேதி வரை நடை திறந்திருக்கும். எல்லா நாட்களிலும் படிபூஜை நடைபெறும். 30 இரவு பத்து மணிக்கு நடை அடைக்கப்படும்.

Leave a Reply