பிரதமர் மோடியின் அடுத்த வெளிநாட்டு சுற்றுப்பயணம். இம்முறை அமெரிக்காவிற்கு செல்கிறார்

பிரதமர் மோடியின் அடுத்த வெளிநாட்டு சுற்றுப்பயணம். இம்முறை அமெரிக்காவிற்கு செல்கிறார்

modiபாரத பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்றதில் இருந்து இதுவரை உலகின் பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளார். எதிர்க்கட்சியினர் இதுகுறித்து கேலியும் கிண்டலும் செய்தாலும் அதுகுறித்து கவலைப்படாமல் பிரதமர் தன்னுடைய அடுத்தடுத்த சுற்றுப்பயணத்தை செய்து கொண்டே வருகிறார். இந்நிலையில் மீண்டும் வரும் செப்டம்பரில் அவர் அமெரிக்காவுக்கு செல்லவுள்ளதாக உறுதியான தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இந்த பயணத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமாவையும் மோடி சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறாது.

ஐ.நா. பொதுச் சபையின் 70-வது ஆண்டு விழா வரும் செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. இந்த விழாவுக்கு பிரதமர் மோடி கலந்து கொள்வது உறுதியாகியுள்ளது. இந்த பயணத்தின்போது பிரதமர் மோடி செப்டம்பர் 27-ம் தேதி சான்பிரான்ஸிஸ்கோவில் உள்ள அமெரிக்க வாழ் இந்தியர்களிடையே அவர் உரையாற்ற விருப்பது அவரது பயணத் திட்டத்தில் இடம்பெற்றுள்ளது. சுமார் 18 ஆயிரம் பேர் கொள்ளளவு கொண்ட எஸ்ஏபி அரங்கம் இந்த நிகழ்ச்சிக்காக முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

நியூயார்க் மற்றும் சிலிக்கான் வேலி செல்லும் மோடி, தொழில்நுட்ப நிபுணர்கள், பன்னாட்டு நிறுவன தலைவர்கள் உள்ளிட்டோரை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் அதிவேக பொருளாதார மேம் பாடு ஆகியவற்றை மேலும் முன்னெடுத்துச் செல்ல இந்தச் சந்திப்பை அவர் மேற்கொள்ள வுள்ளார்.

அமெரிக்காவிற்கான இந்தியத் தூதர் அருண் கே சிங் இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் கூறியபோது “வரும் செப்டம்பரில் பிரதமர் மோடி நியூயார்க் மற்றும் கலிபோர்னியா வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தொழில் நுட்பத்துறை மற்றும் தொழில் துறை பிரதிநிதிகளை அவர் சந்தித்து உரையாடுவார். தொழில்முனைவு, புத்தாக்கம், டிஜிட்டல் பொருளாதாரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகிய துறைகளில் இந்தியாவின் கவனம் இருக்கும். பருவநிலை மாறுபாடு மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகிய இரு பிரச்சினைகளும் மோடி, ஒபாமா சந்திப்பில் முக்கியத்துவம் பெறும்’’ எனத் தெரிவித்தார்.

Leave a Reply