சிவாஜி கணேசனை சொந்தம் கொண்டாட வேண்டாம். காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏவுக்கு ஜெயலலிதா பதில்

சிவாஜி கணேசனை சொந்தம் கொண்டாட வேண்டாம். காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏவுக்கு ஜெயலலிதா பதில்

sivajiganesanநடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசு செலவில் மணிமண்டபம் அமைக்க உள்ளதாக முதல்வர் ஜெயலலிதா நேற்று சட்டமன்றத்தில் விதி எண் 110ன் கீழ் அறிவித்ததை அடுத்து முதல்வரின் அறிவிப்புக்கு காங்கிரஸ் சார்பில் நன்றி காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதரணி தெரிவித்தார்.

அவருக்கு பதிலளித்த முதல்வர் ஜெயலலிதா ‘சிவாஜி கணேசனை யாரும் ஒரு குறுகிய வட்டத்திற்குள் சொந்தம் கொண்டாடி பேச வேண்டாம் என்றும் அவர் எந்த ஒரு கட்சிக்கும் சொந்தமானவர் அல்ல, அவர் எந்த நாட்டுக்கும் சொந்தமானவர் அல்ல இன்னும் சொல்லப்போனால், உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கும், தமிழ் நடிகர்களை ரசிக்கும் தமிழர்களுக்கும் சொந்தமானவர் என்றும் ஆகவே, அவரை ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடைக்க முற்பட வேண்டாம் என்று உறுப்பினரைக் கேட்டுக்கொள்வதாக முதல்வர் கூறினார்.

முன்னதாக நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசு சார்பாக அடையாறு சத்யா ஸ்டூடியோ அருகே மணிமண்டபம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

Leave a Reply