நேரடி ஒளிபரப்பில் துப்பாக்கி சூடு. அமெரிக்க பெண் நிருபர், கேமராமேன் பரிதாப பலி

நேரடி ஒளிபரப்பில் துப்பாக்கி சூடு. அமெரிக்க பெண் நிருபர், கேமராமேன் பரிதாப பலி

tvஅமெரிக்காவில் நேரடி ஒளிபரப்பு ஒன்றின் நடுவே திடீரென மர்ம மனிதன் ஒருவன் புகுந்து துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதால் பேட்டி எடுத்துக்கொண்டிருந்த பெண் நிருபரும், கேமராமேனும் பரிதாபமாக பலியாகினர். பேட்டி கொடுத்த நபர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள விர்ஜினியா மாகாணத்தின் ரோனோகி என்ற பகுதியில் தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்றில் பணிபுரிந்த 24 வயது பெண் செய்தியாளர் அலிசன் பார்க்கர் என்பவரும் கேமராமேன் ஆடம் வார்டு என்பவரும் அருகில் உள்ள ஒரு வணிக வளாகத்தில், சுற்றுலா குறித்து பெண் ஒருவரிடம் பேட்டி எடுத்துக்கொண்டிருந்தனர்.

இந்த நிகழ்ச்சி, நேரடியாக அந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தபோது, திடீரென ஒரு மர்ம நபர் சரமாரியாக தனது துப்பாக்கியால் பெண் நிருபரையும், கேமராமேனையும் நோக்கி சரமாரியாக சுட்டார். இந்த துப்பாக்கி சூட்டில் கலகலப்பாக பேட்டி எடுத்து கொண்டிருந்த பெண் நிருபரும், அந்த காட்சியை படமாக்கிய கேமராமேனும் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே பலியாகினர்.  

இவர்களுக்கு பேட்டி அளித்துக்கொண்டிருந்த பெண் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார். அந்த தொலைக்காட்சியுடன் கருத்து வேறுபாடு கொண்ட பணியாளரால் இந்த தாக்குதல் நடந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

https://www.youtube.com/watch?v=YPzYuilPpFo

Leave a Reply