உணவில் நாம் அதிக முக்கியத்துவம் அளிக்காத பீட்ரூட், உண்மையில் ஒரு சத்துக் கிடங்கு என்று நமக்குத் தெரியாது.
ஆம், பீட்ரூட்டில் மெக்னீசியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம், நைட்ரேட், கால்சியம், தாமிரம், செலினியம், துத்தநாகம், இரும்புச்சத்து மற்றும் மாங்கனீசு போன்ற சத்துகள் நிறைந்துள்ளன.
பீட்ரூட்டின் சில ஆரோக்கிய நன்மைகளைப் பார்க்கலாம்…
* வயிற்றுப் புண் உள்ளவர்கள் தினமும் பீட்ரூட்டை ஜூஸ் போட்டு, தேனுடன் சேர்த்துச் சாப்பிட்டால், வயிற்றுப்புண் விரைவில் குணமாகி விடும்.
* பீட்ரூட் சாறை, வெள்ளரிக்காய் சாறுடன் கலந்து சாப்பிட்டால், சிறுநீரகம் மற்றும் பித்தப்பையில் தங்கியிருக்கும் அழுக்குகள் வெளியேறி, சுத்தமாகும்.
* மூலநோய் இருப்பவர்கள், பீட்ரூட்டை கஷாயம் போட்டு குடித்தால் பலன் கிடைக்கும்.
* கல்லீரல் கோளாறுகளுக்கும் பீட்ரூட் ஒரு சிறந்த மருந்தாகும். அடிக்கடி பித்த வாந்தி எடுப்பவர்களுக்கு பீட்ரூட் ஒரு சிறந்த டானிக்.
* பீட்ரூட்டை தினமும் உணவில் சேர்த்து வந்தால், ரத்த சோகை நோய் வருவதை தடுக்கலாம்.
* தினமும் பீட்ரூட் ஜூஸ் குடித்து வந்தால், அதில் உள்ள ஆன்டிஆக்சிடன்ட், புற்றுநோயை ஏற்படுத்தும் செல்களை அழித்துவிடும். இதனால் புற்றுநோயைத் தடுக்கலாம்.
* உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், பீட்ரூட்டை சாறு எடுத்துக் குடித்து வந்தால், ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைக்கலாம்.
* நாள்தோறும் பீட்ரூட் ஜூஸ் பருகினால், உடலில் தங்கியுள்ள கெட்ட கொழுப்பின் அளவு குறையும்.
* செரிமானப் பிரச்சினை உள்ளவர்கள், பீட்ரூட் ஜூஸ் குடித்தால் அப்பிரச்சினை நீங்கும்.
* பீட்ரூட்டை எலுமிச்சை சாறில் நனைத்து பச்சையாகச் சாப்பிட்டால், ரத்தத்தில் சிவப்பணுக் களின் உற்பத்தி அதிகரிக்கும்.
* பீட்ரூட்டை சாறு எடுத்து குடித்தால், மூளையில் ரத்த ஓட்டம் அதிகரித்து, முதுமையில் ஏற்படும் மறதி நோயான ‘டிமென்சியா’, ஞாபக மறதி நோயான ‘அல்சைமர்’ போன்றவை தடுக்கப்படும் என்று ஆய்வு ஒன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
* சருமத்தில் தாங்க முடியாத அளவு அரிப்பு ஏற்பட்டால், அப்போதே அதைச் சரிசெய்ய பீட்ரூட் சாறுடன் படிகாரத்தைப் பொடியாக்கி அரிப்புள்ள இடத்தில் தடவினால், உடனே அரிப்பு அடங்கிவிடும்.
* கையை தீயில் சுட்டுக்கொள்ள நேர்ந்தால், அப்போது பீட்ரூட் சாறை தீப்புண் உள்ள இடத்தில் தடவினால், தீப்புண் கொப்புளமாகாமல் சீக்கிரம் குணமாகும்.
* பொடுகுத் தொல்லையால் அவதிப்படுபவர்கள், பீட்ரூட் வேக வைத்த நீரில் வினிகரை கலந்து, தலைக்குத் தடவி ஊற வைத்துக் குளித்தால், பொடுகைப் போக்கிவிடலாம்.