மகன் – மகள் காதல். அதிர்ச்சியில் மகளை கொலை செய்த தாய். திடுக்கிடும் தகவல்

மகன் – மகள் காதல். அதிர்ச்சியில் மகளை கொலை செய்த தாய். திடுக்கிடும் தகவல்

murder indiraniஸ்டார் இந்தியா’ என்ற தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி பீட்டர் முகர்ஜி அவர்களின் மனைவி இந்திராணி தனது உடன்பிறந்த தங்கையை கொலை செய்து காட்டுப்பகுதியில் வீசியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு உதவியாக இருந்ததாக அவருடைய கார் டிரைவர் ஷாம் மனோகர் ராய் என்பவரும் கைது செய்யப்பட்டார். போலீஸ் விசாரணையில் இந்திராணி கொலை செய்தது அவரது தங்கையை அல்ல, பெற்ற மகள் என்ற திடுக்கிடும் உண்மை தெரியவந்துள்ளது.

இந்திராணி தற்போது ‘9 எக்ஸ் மீடியா’ என்ற தனியார் தொலைக்காட்சியின் நிறுவனராக இருந்து வருகிறார். சமீபத்தில் இவருடைய டிரைவர் ஷாம் மனோகர் ராய் சட்டவிரோதமாக துப்பாகி வைத்திருந்த குற்றத்திற்காக மும்பை போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அவரை விசாரணை செய்த போலீசாருக்கு பல அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தது. ‘9 எக்ஸ் மீடியா‘ தொலைக்காட்சி நிறுவனரான இந்திராணி 2012-ம் ஆண்டு அவருடைய தங்கை ஷீனா போராவை கொலை செய்து மும்பையை அடுத்த ராய்காட் காட்டுப்பகுதியில் வீசியதாகவும், அதற்கு தான் உதவியதாகவும் அவர் போலீசில் தெரிவித்தார்.

இதனை அடுத்து இந்திராணியை போலீஸ் நிலையம் அழைத்து போலீசார் விசாரணை செய்தனர். இந்த விசாரணையில், தனது தங்கை ஷீனா போராவை தானே கொலை செய்ததாக இந்திராணி ஒப்புக்கொண்டார். முதலில் கொலையான ஷீனா போரா தனது தங்கை என்று கூறிய இந்திராணி, போலீசாரின் தீவிர விசாரணைக்கு பின்னர் ஷீனாவை பெற்றெடுத்த மகள் என்று கூறியதால் போலீஸார் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த கொலை வழக்கு குறித்து மும்பை போலீசார் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

பீட்டர் முகர்ஜிக்கும், இந்திராணிக்கும் 2002-ம் ஆண்டு காதல் திருமணம் நடந்தது. பீட்டர் முகர்ஜி ஏற்கனவே திருமணம் ஆனவர். அவருக்கு முதல் மனைவி மூலம் ராகுல் என்ற மகன் உள்ளார். இதேபோல இந்திராணியும் ஏற்கனவே திருமணமானவர். அவருக்கு ஷீனா போரா (கொலையானவர்) என்ற மகளும், மிக்கேல் போரா என்ற மகனும் உள்ளனர். ஆனால் இந்திராணி தனக்கு ஏற்கனவே ஆன திருமணத்தையும், அதன் மூலம் பிறந்த குழந்தைகள் பற்றிய தகவல்களையும் பீட்டர் முகர்ஜியிடம் மறைத்து விட்டார். மகள் ஷீனா போராவை தனது தங்கை என்றும், மகன் மிக்கேல் போராவை தம்பி என்று கூறி தனது கணவரை ஏமாற்றியுள்ளார். இதனிடையே 2007-ம் ஆண்டு கணவன்-மனைவி இருவரும் ‘9 எக்ஸ் மீடியா‘ என்ற தனியார் தொலைக்காட்சியை ஆரம்பித்து நடத்தி வந்தனர்.

இந்நிலையில் ராகுலுக்கும், ஷீனா போராவுக்கும் காதல் மலர்ந்தது. இந்த முறையற்ற காதலை இந்திராணி எதிர்த்தார். ஆனால் மகள் கேட்கவில்லை. இதனால் இந்திராணி பெற்ற மகள் என்றும் கூட பாராமல் ஷீனா போராவை கழுத்தை நெரித்து கொலை செய்து பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். பின்னர் டிரைவர் ஷாம் மனோகர் ராய் உதவியுடன் மகளின் எரிந்த உடலை ராய்காட் காட்டுப்பகுதியில் வீசினார்.

Leave a Reply