ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை வரவேற்க துடைப்பத்துடன் காத்திருந்த மதுரை அதிமுக மகளிரணி

ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை வரவேற்க துடைப்பத்துடன் காத்திருந்த மதுரை அதிமுக மகளிரணி

evks 1 சென்னை உயர்நீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமீன் பெற்ற தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் நேற்று மதுரை தல்லாகுளம் போலீஸ் நிலையத்தில் கையெழுத்துபோட வந்தபோது மதுரையை சேர்ந்த அதிமுக மகளிரணியினர் கையில் துடைப்பத்துடன் நின்றிருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நேற்று காலை ஹெரிடேஜ் ஓட்டலில் இருந்து தல்லாகுளம் கிளம்பிய இளங்கோவனை தாக்குவதற்காக அதிமுகவினர் ஓட்டலுக்கு வெளியே காத்திருந்ததாக கூறப்படுகிறது. இதனால் பதட்டம் அதிகரித்ததால் இளங்கோவனை பலத்த பாதுகாப்புடன் ஓட்டலில் இருந்து போலீஸ் நிலையத்திற்கு காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் அழைத்து வந்தனர்.

இருப்பினும் அவருக்கு பின்னால் வந்த கார்களின் மீது முட்டைகள் வீசப்பட்டது. தொண்டர்களின் பலத்த பாதுகாப்புடன் காவல் நிலையத்துக்குள் உள்ளே சென்று கையெழுத்து இட்டு விட்டு இளங்கோவன் வெளியே வந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

‘’நேற்று இரவு வரை பாதுகாப்பு வழங்கிய காவல்துறை, இன்று காலையில் தளர்த்தி விட்டது. இங்கே ஒரு அமைச்சர் இருக்கிறார், செல்லூர் ராஜூ, அவர் கொடுக்கும் நூறு ரூபாய்க்கு ஆசைப்பட்டு சில ரவுடிகளும் சில பெண்களும் துடைப்பத்துடன் இங்கே வந்திருக்கிறார்கள். இந்த கூட்டத்தை கலைத்து அனுப்ப போலிசுக்கு ஐந்து evksநிமிடம் போதாதா? அவர்களை விரட்டாமல், என்னை வராதீர்கள், வராதீர்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தனர்.

பயந்து கொண்டு திரும்பிவிட்டான் என்று சொல்வதற்காக. இங்கே போலிஸ் ஆளுங்கட்சி தொண்டர்கள் போலவே நடந்து கொண்டார்கள். தல்லாகுளம் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் எனக்கு நாற்காலி போடாமல் தன் விசுவாசத்தை காட்டினார். இதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன். எனக்கு மக்கள் பாதுகாப்பு கொடுப்பார்கள்.’’ என்று மீண்டும் அதிரடியாக பேசிவிட்டு சென்றார் இளங்கோவன்.

Leave a Reply