ஒரே நாளில் உலகின் 7 பேரில் ஒருவர் பேஸ்புக்கை பயன்படுத்திய அதிசயம்

ஒரே நாளில் உலகின் 7 பேரில் ஒருவர் பேஸ்புக்கை பயன்படுத்திய அதிசயம்

Facebook-on-Computers-e1328150460547 facebook உலகின் மொத்த மக்கள் தொகையே சுமார் 700 கோடி என்றிருக்கும் நிலையில் ஒரே நாளில் 100 கோடி பேர் ஃபேஸ்புக்கை பயன்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. அதாவது உலகில் உள்ள ஏழு பேரில் ஒருவர் ஒரே நாளில் ஃபேஸ்புக்கை பயன்படுத்தியுள்ளனர். இந்த தகவலை ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க் பெருமையுடன் தெரிவித்துள்ளார்.

பேஸ்புக் வரலாற்றில் முதல் முறையாக ஒரே நாளில் 100 கோடி பேர் அதன் சேவையை பயன்படுத்தியுள்ளது ஒரு பெரிய மைல்கல்லை எட்டியுள்ளதாக பெருமையாக கருதுவாக அதன் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் கூறியுள்ளதாவது: “கடந்த திங்கள் அன்று ஒரே நாளில் 100 கோடி பேர், அதாவது உலகில் உள்ள மக்களில் 7 பேரில் ஒருவர் பேஸ்புக்கை பயன்படுத்தியுள்ளனர். முதல் முறையாக இந்த மைல்கல்லை தொட்டிருப்பதாகவும், முழு உலகையும் இணைக்கும் முயற்சியின் துவக்கம்தான் இது என்றும் பேஸ்புக்கின் சாதனை மற்றும் நோக்கம் பற்றி மேலும் பலவிதங்களில் பெருமையுடன் மார்க் குறிப்பிட்டுள்ளார். மார்க்கின் இந்த பதிவுக்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகள் கிடைத்திருப்பதுடன் பலரும் ஆர்வத்துடன் பதில் கருத்து தெரிவித்துள்ளனர்.

வேகமாக வளர்ந்து வரும் பேஸ்புக் கடந்த 2012 ம் ஆண்டு தான் 100 கோடி பயனாளிகள் எனும் எண்ணிக்கையை எட்டியது. தற்போது ஒரு நாளில் அதிக பயனாளிகள் என்னும் சிகரத்தை அடங்கியுள்ளது.

Leave a Reply