முகப் பருக்களை முற்றிலுமாக நீக்க‍

images (4)

சிலருக்கு இயற்கையாக அவர்களின் முகத்தில் அதிக எண்ணெய் பசை இருக்கும் அவ்வாரு இருப்ப‍வரது முகத்தில் பருக்கள் வர வாய்ப்புகள் அதிகம் என்பதா ல் முகத்தை முடிந்தளவு எண்ணெய் பசையில்லாமல் பார்த்துக்கொள்ள‍ வேண்டும். மேலும் உடலில் சேரும் கொழுப்புச் சத்துக்களின் அலர்ஜியால் முகப்பரு ஏற்ப டுவதால், கொழுப்பு சத்து நிறைந்த உணவு வகைகளை தவிர்க்க‍ வேண்டும். .

முகப்பரு உள்ளவர்களுக்கு முகத்தை நன்கு சுத்தமாகக் கழுவ வேண்டும். பருக்களைக் கிள்ளவோ, அடிக்கடி கைகளால் தொடவோ கூடாது. மெல்லிய பருத்தி துணியை பயன்படுத்த வெண்டும்.

மேலும் சமையலறையில்கிடைக்கும் எளிதான பொருள் ஒன்றை கொண்டு உங்களது முகத்தில் ஏற்பட்டிருக்கும் பருக்களை முற்றிலுமாக நீக்க‍ முடியும் என்பதை நீங்கள் அறிவீர்களா?

ஆம்!

இது உண்மைதான் இப்புதினா இலைகளை அம்மியில் வைத்து அரைத்து எடுத்து உங்கள் முகத்தில் பருக்க‍ள் எங்கெல்லாம் உள்ள‍தோ அங்கெல்லாம் அவற்றின்மீது பற்றுபோட வேண்டும். பின் அவை காயும் வரை பொறுத்திருந்து சுத்த‍மான நீரினால் நன்றாக முகத்தை கழுவ வேண்டும். பின் மென்மையான துணியினை கொண்டு முகத்தை ஒத்தி எடுக்க‍ வேண்டும்.

Leave a Reply