அமிதாப்பின் டுவிட்டர் பக்கத்தில் ஆபாச படம். அதிர்ச்சி தகவல்
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் டுவிட்டரில் மிகவும் பிரபலம் ஆனவர். இவருடைய டுவிட்டர் பக்கத்தை சுமார் ஒன்றரை கோடி பேர் பின் தொடர்ந்து வருகின்றனர். தன்னுடைய படத்தின் தகவல்கள், தனது தனிப்பட்ட நிகழ்ச்சிகள் ஆகியவற்றை அவ்வபோது டுவிட்டரில் தெரிவித்து ஆக்டிவ் ஆக தனது டுவிட்டர் பக்கத்தை அமிதாப் எப்போதும் வைத்திருப்பார்.
இந்நிலையில் அமிதாப்பின் டுவிட்டர் பக்கம் திடீரென ஹேக்கிங் செய்யப்பட்டதாகவும், அந்த பக்கத்தை முற்றிலும் முடக்கிய ஹேக்க்கர்கள் அதில் ஆபாச வீடியோவை பதிவு செய்திருப்பதாகவும், சைபர் க்ரைம் அதிகாரிகளிடம் நடிகர் அமிதாப் பச்சன் புகார் தெரிவித்துள்ளார்.
72 வயதான் நடிகர் அமிதாப்பச்சன் டுவிட்டர் சமூக வலைதளம் இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் புகழ்பெற்றது.
அமிதாப்பின் டுவிட்டர் தளத்தில் ஆபாச வீடியோவை பார்த்து உலகம் முழுவதிலும் உள்ள அவரது ஃபாலோயர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து தனது ஃபாலோயர்களுக்கு அமிதாப்பச்சன் விளக்கம் அளித்துள்ளார். அதில், “எனது டுவிட்டரை சிலர் கைப்பற்றி முடக்கினர். அதில் ஆபாச இணைய தளங்களைப் பரவ விட்டனர். யார் இதை செய்தார்கள், சிலர் முயற்சி செய்து இருக்கிறார்கள், நண்பா! எனக்கு இது தேவையில்லாதது” என்று கூறியிருக்கிறார்.