இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டி. வெற்றி பெறும் நிலையில் இந்தியா
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான் 3வது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெறும் நிலையில் உள்ளது. இன்னும் ஒரு நாள் மட்டுமே மீதமுள்ள நிலையில் இலங்கை அணி இன்னும் 319 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் உள்ளது. கைவசம் ஏழு விக்கெட்டுக்கள் மட்டுமே உள்ளதால் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
டாஸ் வென்ற இலங்கை அணி இந்தியாவை பேட்டிங் செய்ய கேட்டுக்கொண்டது. இந்தியா முதல் இன்னிங்ஸில் 312 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 274 ரன்களும் எடுத்த நிலையில் இலங்கை தனது முதல் இன்னிங்ஸில் 201 ரன்களும் 2வது இன்னிங்ஸில் 67/3 என்ற நிலையிலும் உள்ளது.
இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்சில் தரங்கா, கருணாரத்னே, சண்டிமால் ஆகிய மூன்று முக்கிய விக்கெட்டுக்களை இழந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.,