தேவையான பொருட்கள்:
இறால் – 1/4 கிலோ
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 5 (அரைத்தது)
கறிவேப்பிலை – சிறிது
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
தக்காளி சாறு – 2 டேபிள் ஸ்பூன்
புளிச்சாறு – 1 கப்
துருவிய தேங்காய் – 1 கப்
கொத்தமல்லி – சிறிது
எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான பொருட்கள்
செய்முறை:
முதலில் இறாலை நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பின் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய் பேஸ்ட், உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து பிரட்டி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் ஊற வைத்துள்ள இறாலை சேர்த்து 2-3 நிமிடம் குறைவான தீயில் நிறம் மாறும் வரை வறுக்க வேண்டும். இறாலின் நிறம் மாற ஆரம்பிக்கும் போது, அதில் தக்காளி சாறு சேர்த்து மீண்டும் குறைவான தீயில் 2-3 நிமிடம் வேக வைத்து, பின் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும். குழம்பானது கொதிக்க ஆரம்பிக்கும் போது, அதில் புளிச்சாறு சேர்த்து குறைவான தீயில் 5-6 நிமிடம் கொதிக்க விட வேண்டும். இறுதியில் அதில் துருவிய தேங்காயை சேர்த்து கிளறி, 2 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இறக்கி கொத்தமல்லியைத் தூவினால், மராத்தி இறால் குழம்பு ரெடி!!