தேசிய விதை கழகத்தில் பட்டதாரிகள் எம்பிஏ படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு

download

மத்திய அரசின் கீழ் இயங்கும் மினி ரத்னா நிறுவனங்களில் ஒன்றான தேசிய விதைகள் கழகத்தில் உதவியாளர் மற்றும் மேனேஜ்மென்ட் டிரெய்னி பணிக்கு ஊக்கத் தொகையுடன் ஒரு வருட பயிற்சி மற்றும் பயிற்சியை முடித்தவர்களுக்கு பணியும் வழங்கப்பட உள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் விவரம்:

1. உதவியாளர்: (சட்டம்):

1 இடம் (பொது).

சம்பளம்:

ரூ.9,400 – 25,700.

வயது:

7.9.2015 அன்று 30க்குள்.

தகுதி:

பி.எல்., படிப்புடன் பல சட்ட விவகாரங்களை கையாள்வதில் ஓராண்டு முன் அனுபவம். கம்ப்யூட்டர் அறிவு பெற்றிருக்க வேண்டும்.

2. உதவியாளர்: (கண்காணிப்பு):

1 இடம் (பொது).

சம்பளம்:

ரூ.9,400 – 25,700.

தகுதி:

55 சதவீத தேர்ச்சியுடன் ஏதேனும் ஒரு பட்டம் மற்றும் போலீஸ்/ சிஐடி அல்லது அரசு கண்காணிப்பு பணியில் ஓராண்டு முன் அனுபவம். கம்ப்யூட்டர் அறிவு பெற்றிருக்க வேண்டும்.

3. மேனேஜ்மென்ட் டிரெய்னி: (உற்பத்தி):

10 இடங்கள் (பொது – 5, ஒபிசி – 3, எஸ்சி – 1, எஸ்டி – 1).

தகுதி:

60 சதவீத தேர்ச்சியுடன் வேளாண்மை பாடத்தில் பிஎஸ்சி முடித்து வேளாண்மை வணிக மேலாண்மை பாடத்தில் எம்பிஏ படித்திருக்க வேண்டும் அல்லது Agronomy/ Seed Technology/ Plant Breeding & Genetics/ Agriculture Entomology/ Plant Pathology பாடப் பிரிவில் எம்.எஸ்சி. பட்டம்.

4. மேனேஜ்மென்ட் டிரெய்னி: (இன்ஜினியரிங்):

3 இடங்கள் (பொது – 1, ஒபிசி – 1, எஸ்டி – 1).

தகுதி:

வேளாண்மை பொறியியல் பாடத்தில் 60% தேர்ச்சியுடன் பி.இ.,/ பி.டெக். பட்டம்.

5. மேனேஜ்மென்ட் டிரெய்னி: (எப் அண்ட் ஏ):

2 இடங்கள். (பொது – 1, ஒபிசி – 1).

தகுதி:

சிஏ/ ஐசிடபிள்யூஏவில் தேர்ச்சி அல்லது குறைந்தபட்சம் 60 சதவீத தேர்ச்சியுடன் நிதி பாடத்தில் முழு நேர எம்பிஏ பட்டம்.

6. டிப்ளமோ டிரெய்னி (சிவில் இன்ஜினியரிங்):

6 இடங்கள். (பொது – 4, ஒபிசி – 1, எஸ்சி – 1).

தகுதி:

அரசு பாலிடெக்னிக்/ கல்வி நிறுவனத்தில் வேளாண்மை பொறியியல்/ சிவில் இன்ஜினியரிங் பாடப் பிரிவில் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் 3 வருட டிப்ளமோ.

வயது:

7.9.2015 அன்று 27க்குள்.

7. டிரெய்னி (மனித வளம்):

13 இடங்கள் (பொது – 7, ஒபிசி – 4, எஸ்டி – 2).

தகுதி:

55 சதவீத தேர்ச்சியுடன் ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் அல்லது பிபிஏ/ பிசிஏ/ பிஏ/ பெர்சனல் மேனேஜ்மென்ட் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இத்துடன் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம்/ பல்கலைக் கழகத்தில் Industrial Relations/ Personnel Management/ Human Resources Management/ Labour Laws/ Computer Application ஆகிய பாடப் பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் ஒரு வருட டிப்ளமோ.

மேலும் கம்ப்யூட்டரில் எம்.எஸ். ஆபீஸ் பற்றிய அறிவு மற்றும் ஆங்கிலம்/ இந்தியில் நிமிடத்திற்கு 40/35 வார்த்தைகளை டைப்பிங் செய்யும் வேகம் பெற்றிருக்க வேண்டும்.

வயது:

7.9.2015 அன்று 27க்குள்.

8. டிரெய்னி (நிதி):

13 இடங்கள் (பொது – 7, ஒபிசி – 3, எஸ்சி – 2, எஸ்டி – 1).

தகுதி:

குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்களுடன் பி.காம்., இத்துடன் கம்ப்யூட்டரில் எம்.எஸ். ஆபீஸ் பற்றிய அறிவு மற்றும் ஆங்கிலம்/ இந்தியில் நிமிடத்திற்கு 40/35 வார்த்தைகளை டைப்பிங் செய்யும் வேகம் பெற்றிருக்க வேண்டும்.

9. டிரெய்னி (ஸ்டோர்ஸ்):

7 இடங்கள். (பொது – 4, ஒபிசி – 1, எஸ்சி – 1, எஸ்டி – 1).

தகுதி:

குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் பி.எஸ்சி அக்ரி அல்லது இளங்கலை பட்டம் மற்றும் மெட்டீரியல்ஸ் மேனேஜ்மென்ட்/ இன்வென்டரி மேனேஜ்மென்ட்/ ஸ்டோர்ஸ் மேனேஜ்மென்ட் பாடப் பிரிவில் ஒரு வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். இத்துடன் கம்ப்யூட்டர் அப்ளிகேசன்ஸ் பற்றிய அறிவு பெற்றிருக்க வேண்டும்.

10. டிரெய்னி (வேளாண்மை):

12 இடங்கள் (பொது – 7, ஒபிசி – 4, எஸ்சி – 1).

தகுதி:

குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் பி.எஸ்சி அக்ரி முடித்திருக்க வேண்டும். அத்துடன் கம்ப்யூட்டரில் எம்.எஸ். ஆபீஸ் பற்றிய அறிவு பெற்றிருக்க வேண்டும்.

11. டிரெய்னி (லேபரட்டரி):

2 இடங்கள் (பொது – 1, ஒபிசி – 1).

தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/ கல்வி நிறுவனத்தில் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் வேதியியல் மற்றும் உயிரியல் பாடப்பிரிவில் பி.எஸ்சி. பட்டம்.

விண்ணப்ப கட்டணம்:

பொது மற்றும் ஒபிசியினருக்கு ரூ.500. இதை National Seeds Corporation Limited என்ற பெயரில் புதுடெல்லியில் மாற்றத்தக்க வகையில் டிடி அல்லது பேங்கர் செக்காக எடுக்க வேண்டும்.

எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.indiaseeds.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

The Senior General Manager (HR),
National Seeds Corporation Limited, B
eej Bhawan, Pusa Complex,
NEWDELHI- 110 012.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 7.9.2015.

Leave a Reply