டில்லி பேருந்துகளில் இலவச வைஃபை. முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

டில்லி பேருந்துகளில் இலவச வைஃபை. முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

wifiடில்லியில் கடந்த ஆண்டு புதிய முதல்வராக பதவியேற்ற ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், மக்களுக்கு பலவிதமான அதிரடி அறிவிப்புகளை அவ்வப்போது அறிவித்து  வருகிறார். இந்நிலையில் டில்லி பேருந்துகளில் இலவச வைபை (WiFi) சேவை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

டில்லி டாக்கடோரா உள் அரங்கில் நேற்று நடைபெற்ற போக்குவரத்து கழக விழாவில், முதல்வர் கேஜ்ரிவால் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது, “டெல்லி போக்குவரத்து கழகம் பேருந்துகளின் ஊழியர்களிடம், மாதம் குறைந்தது 2250 கிலோ மீட்டர் தூரம் பேருந்தை ஓட்டுபவர்களுக்கு, தற்போது வழங்கப்படும் கிலோ மீட்டருக்கு 4 ரூபாய் வழங்கப்படுவதிலிருந்து மேலும் ஒரு ரூபாய் உயர்த்தி 5 ரூபாய் வழங்கப்படும். அதேபோல, மாதத்துக்கு 2250 கிலோ மீட்டருக்கும் அதிகமாக பேருந்தை ஓட்டிச் செல்வோருக்கு ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் தற்போது வழங்கப்படும் 5 ரூபாயிலிருந்து ஒரு ரூபாய் உயர்த்தி 6 ரூபாயாக கொடுக்கப்படும்.

மேலும் டில்லியின் பேருந்துகளில் இலவச வைபை (WiFi) சேவை விரைவில் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பிரபல தொலைதொடர்பு நிறுவனங்களும், கூகுள், பேஸ்புக் மற்றும் எரிக்சன் போன்ற நிறுவனங்களிடமும் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளோம்’ என முதல்வர் தெரிவித்துள்ளார்.

இவ்விழாவில் போக்குவரத்து துறை மந்திரி கோபால் ராய் மற்றும் டி.டி.சி. மேலாளர் சி.ஆர்.கார்க் ஆகியோருடன் ஆயிரக்கணக்கான ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

Leave a Reply