தாய்லாந்து இந்து கோவில் மீது குண்டுவெடிப்பு. குற்றவாளிகள் அடையாளம் தெரிந்தது.

தாய்லாந்து இந்து கோவில் மீது குண்டுவெடிப்பு. குற்றவாளிகள் அடையாளம் தெரிந்தது.
thiland
கடந்த மாதம் 17ஆம் தேதி தாய்லாந்து நாட்டில் உள்ள பாங்காக்கில் உள்ள இந்து கோவில் அருகில் பயங்கர சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில் 20 பேர் வரை கொல்லப்பட்டனர். இந்த வெடிகுண்டுக்கு காரணமானவர்களை தாய்லாந்து போலீஸார் தீவிரமாக தேடி வந்த நிலையில் தற்போது இந்த வெடிகுண்டு சம்பவத்திற்கு காரணமான இருவரை போலீஸார் அடையாளம் கண்டுள்ளனர். இவர்கள் இருவரையும் பிடிக்க போலீஸார் வாரண்ட் பிறப்பித்ததுடன் இருவரின் புகைப்படங்களையும் வெளியிட்டு இவர்களை கண்டுபிடிக்க பொதுமக்கள் உதவுமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதுகுறித்து தாய்லாந்து காவல்துறை செய்தித் தொடர்பாளர் பிராவுத் தாவோர்ன்சிறி என்பவர் கூறியபோது, ‘இந்து கோயில் அருகே நடைபெற்ற குண்டு வெடிப்பு தொடர்பாக வான்னா சுவான்சாந்த்  என்ற 26 வயது பெண்ணைத் தேடி வருவதாகவும், பாங்காக்கின் மின் புரி பகுதியில் குண்டு வெடிப்புக்குப் பயன்படும் பொருள்கள் கைப்பற்றப்பட்ட அறையில் அவர் தங்கியிருந்ததாகவும் கூறினார். மேலும், அந்த அறையில் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை நடத்திய சோதனையில், வெடிமருந்தாகப் பயன்படுத்தக் கூடிய யூரியா உரம், தொலைவிலிருந்து இயக்கப்படும் பொம்மை வாகனம், வெடிகுண்டுகளை தொலைவிலிருந்து வெடிக்கச் செய்யக்கூடிய கருவிகள், குண்டுத் தாக்குதல்களின்போது மரணத்தையும், காயத்தையும் ஏற்படுத்தும் நோக்கில் வெடிகுண்டுகளில் நிரப்பக்கூடிய இரும்பு மரையாணிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறினார்.

வான்னா சுவான்சாந்த் தவிர, பெயர் குறிப்பிடப்படாத மற்றொரு நபருக்கு எதிராகவும் போலீஸார் வாரண்ட் பிறப்பித்துள்ளனர். இதையடுத்து, பாங்காக் குண்டு வெடிப்புடன் தொடர்புடையவர்கள் என போலீஸாரால் சந்தேகிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை 4-ஆக அதிகரித்துள்ளது. ஏற்கெனவே, கோயில் கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு, குண்டு வெடிப்பை நிகழ்த்தியதாக மர்ம நபர் ஒருவரின் வரைபடத்தை தாய்லாந்து போலீஸார் வெளியிட்டனர். மேலும், வெடி குண்டு தயாரிக்கப் பயன்படும் பொருள்களுடன் வெளிநாட்டு நபரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.  அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
 

Leave a Reply