117 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி. பிரதமர் மோடி வாழ்த்து

117 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி. பிரதமர் மோடி வாழ்த்து

cricket2இலங்கைக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது. வெற்றி பெற்ற இந்திய அணிக்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கத்.

இலங்கை சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி, அந்நாட்டு அணியுடன் மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. முதல் போட்டியில் இலங்கையும், இரண்டாவது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்ற நிலையில் மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கடந்த 28ஆம் தேதி தொடங்கியது.

முதல் இன்னிங்ஸில் 312 ரன்களும் இரண்டாவது இன்னிங்சில் 274 ரன்களும் இந்திய அணி எடுத்தது. இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 201 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் 268 ரன்களும் எடுத்ததால், இந்திய அணி 117 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் அபாரமாக சதமடித்த புஜாரா ஆட்ட நாயகனாகவும், இந்த தொடரில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய அஸ்வின் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply