கூகுளின் புதிய வண்ணமயமான லோகோ.
கூகுள் நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக சென்னையை சேர்ந்த சுந்தர் பிச்சை பதவி ஏற்றதை அடுத்து கூகுள் நிறுவனத்தில் பல அதிரடி மாற்றங்கள் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் கூகுளின் லோகோ தற்போது வண்ணமயமாக மாற்றப்பட்டுள்ளது.
கடந்த 17 வருடங்களாக பல்வேறு பரிணாமங்களை கண்டு வந்த கூகுள் நிறுவனம் காலத்திற்கேற்ப பல மாற்றங்களை செய்து வருகிறது. கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு கம்ப்யூட்டர் மூலம் மட்டுமே கூகுளை பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது செல்போன், டேப்ளட் ஆகியவற்றிலும் பயன்படுத்த பல ஆப்ஸ் வந்துவிட்டதால் இதன் புதிய லோகோ மிகச் சிறிய ஸ்க்ரீனிலும் தெளிவாக தெரியும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. கூகுள் அனைத்து சேவைகளுக்கும் ஒரே லோகோவை பயன்படுத்துவதன் மூலம் இன்னும் எளிதாக கூகுளை பயன்படுத்த முடியும். இது, நீங்கள் கூகுளைப் பயன்படுத்துவது மட்டும் அல்லாது கூகுள் உங்களுக்கு சேவை புரிகிறது என்பதையும் காட்டுகிறது.
உதாரணத்திற்கு, கூகுளின் வண்ணமயமான மைக் இன்னும் எளிதாக ஆடியோ வசதிகளை செய்து தரும். மேலும், பழைய சின்னத்தில் உள்ள சிறிய நீல நிற Gயை நீக்கிவிட்டு, நான்கு வண்ணங்களில் கலர்புல் G யை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கலர்புல் மாற்றம் இன்றைக்கு மட்டும் அல்ல…எதிர்காலத்தையும் இது காட்டுகிறது. இந்த புதிய லோகோ உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.