படியில் பயணம் செய்யும் பயணி கீழே விழுந்தால் நடத்துனர் உரிமை பறிக்கப்படும். அதிரடி அறிவிப்பு
பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்று நேற்று நாமக்கல் செல்வம் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கான விதிமுறைகள் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டது. மேலும் பேருந்துகளில் பயணிகள் படியில் நின்றுகொண்டு பயணம் செய்யும் போது விபத்து ஏற்பட்டால் அதற்கு நடத்துனரே முழு பொறுப்பும், அதுபோன்ற அசம்பாவிதங்கள் நடந்தால் நடத்துனர் உரிமம் ரத்து செய்யப்படும் என்ற புதிய அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், பேருந்துகளில் அதிகளவில் ஒலி எழுப்பும் வகையில் திரைப்பட பாடல்களை ஒலிபரப்புவது, காற்று ஒலிப்பான்களை பயன்படுத்து ஆகியவற்றை தவிர்க்க வேண்டும் என ஓட்டுனர்-நடத்துனர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. மேலும் பயணிகளிடம் மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும், ஓட்டுநர் மற்றும் நடத்துனரின் செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு தவறு செய்பவர்கள் மீது கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் 200 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.