சுசீந்திரனின் அடுத்த ஹீரோ அஜீத்தா? விஜய்யா?

சுசீந்திரனின் அடுத்த ஹீரோ அஜீத்தா? விஜய்யா?
susee
சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்த ‘பாயும் புலி’ திரைப்படம் வரும் வெள்ளியன்று ரிலீஸாகவுள்ள நிலையில் சுசீந்திரனின் அடுத்த படத்தில் அஜீத் அல்லது விஜய் நடிக்க வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

சுசீந்திரன் தனது படத்திற்காக கதையை தயார் செய்து வைத்துள்ளதாகவும், இந்த கதையை ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்க்க கண்டிப்பாக ஒரு ஹீரோ தேவை என்றும் கூறியுள்ள அவர் தமிழில் அஜீத் அல்லது விஜய், மலையாளத்தில் மோகன்லால், தெலுங்கில் பவன்கல்யாண் போன்ற பெரிய நடிகர்கள் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என தாம் விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

விஜய் தற்போது ‘விஜய்59’ படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து எஸ்.ஜே.சூர்யாவின் இயக்கத்தில் அடுத்த படம் நடிக்கவுள்ளதால் விஜய்யுடன் சுசீந்திரன் இணைவது சந்தேகம்தான். ஆனால் அஜீத்தின் அடுத்த படத்தை இயக்குவது யார் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படாததால் அஜீத்-சுசீந்திரன் இணைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply